பக்த அனுமன் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் அவரவர் நம்பிக்கைகளின் படி அனுமனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மூல நட்சத்திரம் கூடிய மார்கழி அமாவாசை திதியில் அனுமன் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவபெருமானின் அருளால் அஞ்சனைக்கு மகனாய் அவதரித்த ஆஞ்சநேயரின் தந்தை வாயு பகவான் என்பதால், வாயுபுத்திரன் என்ற பெயர் பெற்றவர் ஹனுமான். மாருதி என்றும் அழைக்கப்படும் ஹனுமான், ஸ்ரீராமரின் பக்தராகவும், சீடராகவும் போற்றப்படுகிறார். 


ஹனுமான் ஒரு சிரஞ்சீவி (Lord Hanuman), அதாவது அழிவே இல்லாதவர், இன்றும் அவர் இருக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள், ராமரின் நாமம் உச்சரிக்கப்படும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள, பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலை உள்ள ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 



இன்று அதிகாலை 5 மணிக்கு 19 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அனுமன் அருள்புரிந்தார். 


இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அனுமன் ஜெயந்தியை கொண்டாடினார்கள். 


கொரோனா கட்டுபாடுகளால் வழக்கம்போல ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து இறைவனை தரிசிக்க முடியவில்லை. ஒருமணி நேரத்திற்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.


தரிசனத்திற்காக இணைய வழியில் பதிவு செய்த 300 பேர், இலவச தரிசன முறையில் 200 பேர் என மொத்ததம் 500 பேர் மட்டுமே ஒரு மணி நேரத்தில் அனுமரை இன்று தரிசிக்க முடியும்.இவ்விழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர்.


Also Read | இன்றைய ஆலய வழிபாட்டில்! வீர ஆஞ்சநேயர் கோவிலின் மகத்துவங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR