இன்று கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்த ஜன்மாஷ்டமி. இந்த நாளை உலகில் உள்ள இந்துக்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். சிறையில் பிறந்து, மற்றவர்களின் மனதை சிறை கொண்ட குழந்தைக் கண்ணனின் பிறந்த நாள் இன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் அன்புடன் அழைக்கப்படும் கண்ணன் பிறந்த நாளான ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கோகுலாஷ்டமியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


புராணங்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், கண்ணனை சிறையில் பெற்றெடுத்தவர் அன்னை தேவகி. ஆயர்பாடியில் குழந்தைக் கண்ணனை வளர்த்தெடுத்தவர் யசோதா தாய். ஆனால், யசோதா மற்றுமொரு பிறவியில் குழந்தை கிருஷ்ணனை வளர்த்தெடுத்தவர் என்று ஒரு கதை கூறுகிறது. அந்தக் கதை தெரியுமா?


இந்தக் கதை பொதுக் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை, இதற்கு தெளிவான புராண விளக்கத்தைப் பெறவில்லை. இருப்பினும், விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு பற்றிய விளக்கம் உள்ளது. 


Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 ஆகஸ்ட் 30, ஆவணி 14ம் நாள், திங்கட்கிழமை


மதுராவின் சிறையில் பிறந்த கண்ணன், கோகுலத்திற்கு பாதுகாப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இங்கே தாய் யசோதா மற்றும் நந்தகோபரின் வீட்டில் கோகுலாக வளர்ந்தார் என்பது அனைவரும் அறிந்த கதை. ஆனால், அறியாத கதை இது.


விஷ்ணு புராணத்தின் படி, மனுவும் சதரூபரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தனர்.விஷ்ணு புராணத்தின் படி, மனுவும் சதரூபரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தனர். இந்த தவத்தை மெச்சிய காக்கும் கடவுள் விஷ்ணு, உலகின் தான் அவதாரம் எடுக்கும் போதெல்லாம், இந்த இருவருமே தனது பெற்றோர்களாக இருப்பார்கள் என்று வரம் அளித்தார்.


இந்த வரத்தின் அடிப்படையில் தான், த்ரேத யுகத்தின் போது, மனு, தசரதராகவும் சத்ரூபா, கெளசல்யாவாகவும் பூவுலகில் பிறந்தனர். ராம அவதாரத்தில் ஸ்ரீராமன் மீது அதிக பாசம் வைத்தவர் குழந்தை ராமனின் மாற்றாந்தாய் கைகேயி.


Also Read | ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்


ராமனை தனது மகனை விட அதிகம் நேசித்தவர் கைகேயி. ஆனால் அவன் ஸ்ரீராமனை வனவசாதற்கு அனுப்பியதற்கு காரணமாகவும் இருந்த கைகேயின் மனதில் அது குறித்த ஆழ்ந்த வருத்தமும் இருந்தது. எனவே, ராமரிம் வரம் கேட்ட கைகேயி, உண்மையில் நீ எனது மகனாக பிறக்கவேண்டும், அப்போதுதான் எனக்கு ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும் என்று இறைஞ்சினார்.


கைகேயியின் பாசத்தை ஆழ்ந்து அனுபவித்தவர் கெளசலை புத்திரன் ராமன். எனவே, அவர் கைகேயிக்கு இப்படி வரம் அருள்கிறார்: “ஆனால் அனைத்து அவதாரங்களிலும் அன்னை கெளசலைக்கு மகனாக பிறப்பேன் என்று வரம் கொடுத்திருக்கிறேன். அதனால் உங்கள் கருவில் நான் பிறக்க முடியாது. ஆனால், துவாபர யுகத்தில் பிறக்கும்போது, பிறந்த உடனேயே உங்களிடம் வந்துவிடுவேன், அனைவரும் நானே உங்கள் மகன் என்று அழைப்பார்கள். என்னுடைய பெயருடன் உங்கள் பெயரும் இணைந்துவிடும்”  


தான் கொடுத்த வரத்தின்படி, கிருஷ்ணாவதாரத்தில், மனுவின் உருவாய் பிறந்த அன்னை தேவகியின் கருவில் உதித்தாலும், யசோதையிடம் வளர்ந்து யசோதாவின் மகன் என்றே அறியப்பட்டார் ஸ்ரீகிருஷ்ணர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தானே, தேவகி மைந்தன் கண்ணன் என்பது உலகுக்குத் தெரிந்தது?


Read Also | அயோத்தி ராமர் ஆலயம் கட்ட ஆகும் செலவு என்ன தெரியுமா?
 
திரேதாயுகத்திற்குப் பிறகு அடுத்த ஜென்மத்தில், கைகேயி வசுஷ்ரேஷின் மனைவி தாராவாக பிறந்தார். இந்த பிறப்பில், தம்பதியர் பிரம்மாவை தவம் செய்தனர். நாங்கள் பூமியில் எங்கள் வீட்டு முற்றத்தில்  குழநதையாக விஷ்ணு பிறக்க வேண்டும் என்று வரம் கேட்க, பிரம்மனும் அப்படியே ஆகுக என்று வரமளித்தார். 


இந்த வரத்தின் விளைவால், தாரா பிரஜ் என்ற பிரதேசத்தில்  சுமுக் கோபா -  பாட்டலா தம்பதிகளின் மகளாக  பிறந்தார். யசோதா என்று பெயருடன் வளர்ந்த அவர், நந்தகோபாலனை மணந்தாள்.


ராமர் மற்றும் பிரம்மா கொடுத்த வரங்களின்படி, பகவான் கிருஷ்ணர் இந்த நந்தகோபன் - யசோதா தம்பதிகளின் மகனாக வளர்ந்தார். பார் போற்றும் பரமன், பர்ந்தாமன், ஸ்ரீகிருஷ்ணன் மானுடனாக பிறப்பெடுத்த நாள் இன்று கிருஷ்ண ஜெயந்தி... இன்று கண்ணனை வணங்கி, வரம் பெறுவோம், வளமாய் வாழ்வோம்.


Also Read | Rasipalan 30 August 2021: இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2021


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR