ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: LTC விதிகளில் மாற்றம்... இனி அதிக நன்மைகள் கிடைக்கும்
7th Pay Commission: LTC விதியில் அரசாங்கம் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளது. பயணத்தின் போது உணவுக்கான கட்டணம் மற்றும் டிக்கெட் முன்பதிவு கட்டணமும் இதில் அடங்கும்.
7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி உள்ளது. எல்டிசி பயணத்தின் போது அவர்களுக்கு அதிக வசதிகள் கிடைக்கும். எல்டிசி விதிகளில் மூன்று புதிய மாற்றங்களை அரசாங்கம் செய்துள்ளது. பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட அறிவிப்பின்படி, LTC விதியில் அரசாங்கம் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளது. பயணத்தின் போது உணவுக்கான கட்டணம் மற்றும் டிக்கெட் முன்பதிவு கட்டணமும் இதில் அடங்கும்.
LTC தொடர்பான புதிய விதிகள் இவை
அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசால் சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த ஊழியர்களுக்கான எல்டிசி விதி மத்திய சிவில் சர்வீசஸ் 1988 இன் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. DoPT இன் புதிய விதிகள் பற்றிய தகவல் தற்போது வந்துள்ளது. DoPT இன் அறிவிப்பின்படி, இப்போது ஊழியர்கள் ரயில் பயணத்தின் போது உணவுக்காக ஏற்படும் செலவினங்களை திரும்ப பெறலாம். அரசு ஊழியர் ரயில் பயணத்தின் போது ரயில்வே கேட்டரிங் உணவைத் தேர்ந்தெடுத்தால், அவர்களுக்கு அதற்கான தொகை திருப்பி அளிக்கப்படும். மேலும், விமான பயணங்கள் ரத்து ஆனால் கேன்சலேஷன் சார்ஜுகளையும் ஊழியர்கள் திரும்ப பெறலாம். மேலும், குறுகிய வழித்தடங்களுக்கும் இனி அவர்கள் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களை பெறுவார்கள். இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பயணத்தின் போது உணவுக்கான தொகை
டிஓபிடி வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயிலில் பயணத்தின் போது உணவுக்காக செலவழித்த பணத்தை ஊழியர்கள் கோரலாம், அதாவது இந்த தொகை அவர்களுக்கு ரீயெம்பர்ஸ் ஆகும். ஊழியர்கள் ரயிலில் பயணிக்கும்போது ரயில்வேயின் கேட்டரிங் மெனுவிலிருந்து உணவைத் தேர்வு செய்து உண்ணலாம். பின்னர், இந்த உணவுக்கான தொகை அவர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட் ரத்து கட்டணம்
ஒரு மத்திய அரசு ஊழியர் LTC (DoPT) பயணத்தின் கீழ் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து, ஏதேனும் காரணத்திற்காக அவர்கள் அதை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்கள் அரசாங்கத்திடமிருந்து விமான நிறுவனங்கள், முகவர் அல்லது புக்கிங் தளம் வசூலிக்கும் ரத்து கட்டணங்களையும் (கேன்சலேஷன் சார்ஜஸ்) பெறுவார்கள்.
மேலும் படிக்க | கையில் இருந்த 100 ரூபாயை, 200 கோடி ரூபாயாக மாற்றியவரின் உண்மை கதை - முழு பின்னணி!
குறுகிய வழிக் கட்டணங்கள்
எல்டிசி -இல் விமானப் பயணத்திற்கான தகுதியில்லாத மத்திய அரசு ஊழியர்கள், பயணத்திற்கான தொகையை திரும்பப் பெற, இனி IRCTC, BLCL அல்லது ATT மூலம்தான் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறுகிய வழித்தடங்களுக்கும் இனி அவர்கள் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களை பெறுவார்கள். இருப்பினும், இந்த காலகட்டத்தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், ரத்து கட்டணத்தை ஊழியர் செலுத்த வேண்டும்.
மத்திய அரசு தனது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் LTC வசதிகளை வழங்குகிறது. இது ஊழியர்களுக்கு பிற ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வர மிகவும் உதவியாக இருக்கின்றது.
மற்றொரு நல்ல செய்தி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியும் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. வரும் மாதங்களில் ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன என கூறினால் அது மிகையல்ல. இந்த முறை அதாவது ஜூலை 2023 முதல் அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை 3 அல்லது 4 சகவிகிதம் உயர்த்தக்கூடும் என நம்பப்படுகின்றது. இது அடிப்படை சம்பளத்தை நன்றாக அதிகரிக்கும். இது பற்றிய அறிவிப்பை இன்னும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், இது குறித்த ஊடக அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ