HDFC வங்கியின் எக்ஸ்பிரஸ் கார் லோன்; அரை மணி நேரத்தில் கார் கடன்
HDFC வங்கி மிகக் குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கார் கடன்களை வழங்கும் எக்ஸ்பிரஸ் கார் லோன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கார் கடன் பெறவேண்டும் என நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கானது. இப்போது நீங்கள் கார் கடனுக்காக அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை. உண்மையில், மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அரை மணி நேரத்தில் கார் கடன் வழங்கும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக 'எக்ஸ்பிரஸ் கார் லோன்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. HDFC வங்கியின் இந்த சிறப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், கார் வாங்கும் உங்கள் கனவை எளிதாக நனவாக்க முடியும். இதற்காக, வங்கி தனது கடன் விண்ணப்பத்தை நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் டீலர்களுடன் ஒருங்கிணைத்துள்ளது.
எளிதாக கார் கடன் வாங்க முடியும்
எச்டிஎஃப்சி வங்கி தனது செய்திக்குறிப்பில் கூறியதாவது, “தொழில்துறையில் இதுபோன்ற சேவை முதன் முதலில் வழங்கப்படுகிறது. இது நாட்டில் கார் கடன் பெறுவதற்கான நடைமுறையை பெருமளவில் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. HDFC வங்கி கார் வாங்குபவர்களுக்கு கடன் பெறும் வழிமுறையை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்த வழியில், கார் ஷாப்பிங் கிராமத்திலிருந்து நகரம் வரை மிகவும் வேகம் பெறும்”.
மேலும் படிக்க | முதலீட்டு டிப்ஸ்: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 15 x 15 x 15 பார்முலா
விரைவில் இந்த கடன் வசதி இரு சக்கர வாகனங்களுக்கும் கிடைக்கும்
தற்போது இந்த வசதி நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே என்றும், படிப்படியாக இரு சக்கர வாகனக் கடனுக்கும் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் HDFC வங்கி தெரிவித்துள்ளது. தற்போது, ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் புதிய வாகனங்கள் நாட்டில் விற்பனையாகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில், நாட்டில் 350 மில்லியனுக்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 25 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR