உங்கள் PIN-ஐ இந்த எளிய வழிகளில் மாற்றலாம், சைபர் மோசடியிலிருந்து தப்பிக்கலாம்!!
வங்கிக் கணக்குகளைப் பொறுத்த வரை, மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இங்கு ஏதாவது மோசடி நடந்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சம்பாதித்து சேமித்த அனைத்தும் குற்றவாளிகளின் கையில் சென்று விடலாம்.
சைபர் தாக்குதல்களைத் (Cyber Fraud) தவிர்க்க, நாம் வழக்கமாக, நமது சாதனங்களில், நமது வெவ்வேறு ஆன்லைன் அகௌண்டுகளில் தனித்துவமான பாஸ்வர்டுகளை வைக்கிறோம். இந்த பாஸ்வர்ட் (Password) , நமது தகவல் பாதுகாப்பாக உள்ளது என்ற உறுதியை நமக்கு அளிக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படியே நடக்கும் என கூற முடியாது. ஆகையால், வங்கிக் கணக்குகள் முதல் சமூக ஊடக தளம் வரை, அனைவரும் தங்கள் பயனர்களுக்கு அவ்வப்போது பாஸ்வர்டுகளை மாற்றுமாறு அறிவுறுத்துகிறார்கள்.
வங்கிகளைப் பொறுத்த வரை, இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இங்கு ஏதாவது மோசடி நடந்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சம்பாதித்து சேமித்த அனைத்தும் குற்றவாளிகளின் கையில் சென்று விடலாம். வங்கியின் ஏடிஎம் (ATM) அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் பின் (PIN) 4 இலக்கங்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆகவே பாதுகாப்புக்காக அதை மாற்ற வேண்டியது மிக அவசியம்.
ALSO READ: Aadhar Card-ல் இந்த 5 விஷயங்களை update செய்ய எந்த ஆவணமும் தேவை இல்லை!!
இத்தகைய சூழ்நிலையில், உங்கள் ATM Card-ன் PIN-ஐ வெறும் 7 படிகளில் மாற்றலாம்:
உங்களுக்கு அருகிலுள்ள எதாவது வங்கியின் ATM-க்கு செல்லுங்கள். எந்த வங்கியின் கார்டின் PIN-ஐயும் எந்த வங்கியின் ATM-மிலும் மாற்றலாம் என்ற வசதி அனைத்து ATM-களிலும் உள்ளது.
Card இயந்திரத்தின் கார்ட் ஸ்லாட்டில் உங்கள் கார்டை செருகவும் அல்லது ஸ்வைப் செய்யவும். மொழியைத் தேர்வு செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். உங்களுக்கு ஏற்ற மொழியைத் தேர்வு செய்யவும்.
உங்களுடைய தற்போதைய PIN-ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் தற்போதைய PIN-ஐ உள்ளிடவும்.
இதற்குப் பிறகு, கணினியின் திரையில் வெவ்வேறு ஆப்ஷன்கள் வரும். அவற்றில் ஒன்று – ‘PIN மாற்றம்’ என்று இருக்கும். அதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே ‘புதிய பின்னை உள்ளிடவும்’ என்ற செய்தி திரையில் தோன்றும். அங்கே உங்கள் புதிய PIN-ஐ உள்ளிட வேண்டும்.
இதற்குப் பிறகு, ‘புதிய PIN-ஐ மீண்டும் உள்ளிடுங்கள்’ என திரையில் மற்றொரு செய்தி வரும். நீங்கள் மீண்டும் உங்கள் PIN-ஐ உள்ளிட வேண்டும்.
நீங்கள் முதலில் உள்ளிட்டPIN-ஐ தான் அடுத்த முறை கேட்கப்படும்போதும் உள்ளிட வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இதைச் செய்த பிறகு, உங்கள் பின் மாற்றப்பட்ட செய்தி திரையில் தோன்றும்.
ALSO READ: ஆதார் அட்டை தொடர்பான பிரச்சனையை இனி நொடியில் தீர்க்கலாம்!