ஹோலி 2022: ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இந்த பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் பல மாநிலங்களில் இந்த ஆண்டு ஹோலிகா தஹானம், வியாழன், மார்ச் 17, 2022 அன்றும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி மார்ச் 18 வெள்ளிக்கிழமை அன்றும் கொண்டாடப்படும். எனினும், சில இடங்களில் இந்த முறை ஹோலி மார்ச் 19 அன்று கொண்டாடப்படுகிறது. 


ஹோலி பண்டிகைக்கு நாட்டின் பல இடங்களில் பல வித பெயர்கள் உள்ளன. ஒவ்வொரு பெயரும் ஒரு மர்மமான அம்சத்தையும் குறிப்பிடுகின்றது. வெவ்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் வெவ்வேறு வகையாக ஹோலி கொண்டாடப்படுவதற்கான காரணத்தையும் ரகசியத்தையும் இங்கு காணலாம். 


உத்தர பிரதேசம், பீகார் 


உ.பி மற்றும் பீகாரில், குறிப்பாக இந்த முறை 'கப்டா-பட்' எனப்படும் கோலாகல ஹோலி நடக்க உள்ளது. ஏனென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் ஹோலி விளையாடினர். எனினும், தற்போது தொற்று அளவில் வெகுவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், இம்முறை கோலாகலமாக ஹோலி பண்டிகையை விளையாட மக்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். 


40 நாட்கள் திருவிழா


கிருஷ்ணரின் நகரமான மதுரா, பிருந்தாவனம், கோகுலம், நந்தகாவ் மற்றும் பர்சானாவில் பல நாட்களுக்கு முன்பே ஹோலி கொண்டாட்டங்கள் துவங்கிவிடுகின்றன. விருந்தாவனத்தில் ஹோலி ரங்பரி ஏகாதசியில் தொடங்கி புட்வா மங்கல் வரை தொடர்கிறது.


விவசாயிகளின் ஹோலி


வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, இலையுதிர் காலத்தின் முடிவையும் வசந்த காலத்தின் வருகையையும் குறிக்கிறது. வேத காலத்தில் இந்த விழா 'நவத்ரைஷ்டி யாகம்' என்று அழைக்கப்பட்டது. அப்போது, ​​விவசாயிகளின் வயலில் முழுமையாக முதிர்வடையாத தானியத்தை யாகத்திற்கு அளித்து அதை பிரசாதமாக எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. 


அன்னம் ஹோலா என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாகவும் இந்த பண்டிகை ஹோலிகோத்சவ் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட, விவசாயிகளின் இந்த வழக்கம் பல சிறு கிராமங்களில் பின்பற்றப்படுகின்றது. 


சித்தா பஸ்ம ஹோலி


உ.பி.-பீகாரில் ஹோலி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. பிற மாநிலங்களிலும் இது வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஹோலி கொண்டாடுவதற்கு அவர்களுக்கென தனித்துவமான வழிகள் உள்ளன. 


நாம் பனாரஸைப் பற்றி பேசினால், ஹோலி அங்கு வண்ணமயமான ஏகாதசியன்றே தொடங்கி விடுகிறது. பூத்பவன் பாபா என அழைக்கப்படும் சிவபெருமானின் திருமணத்தின் இரண்டாம் நாள் ரங்பரி ஏகாதசி அன்று, காசியில் அவரது கணங்களால் சித்தபஸ்ம ஹோலி கொண்டாடப்படுகின்றது. 


மேலும் படிக்க | Donkey as Son in law: கழுதையை மருமகனாக உலா அழைத்து வரும் ஹோலி சடங்கு! சுவாரசியமான சடங்கு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR


ரங்பரி ஏகாதசியின் போது, ​​கௌரியை மணந்துகொண்டு, கைலாசத்திற்கு அழைத்துச்செல்லும் சிவபெருமான், தனது பக்தர்களை ஹோலி கொண்டாடவும், காசியில் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் அனுமதிக்கிறார். அதன் பிறகு மக்கள் அங்குள்ள அனைத்து காட்களிலும் கோலாகலமாக ஹோலி கொண்டாடத் துவங்குகிறார்கள். 


ராதா-கிருஷ்ணரின் ராஸ லீலை மற்றும் காமதேவரின் மறு அவதாரம்


பிரஹலாதன் கதை மட்டுமல்லாமல், ஹோலி பண்டிகைக்கான மூலம், கண்ணன் மற்றும் ராதையின் ராஸ லீலை, காமதேவரின் மறுபிறவி என பல்வேறு புராண கதைகளுடன் தொடர்புகொண்டுள்ளது. ஹோலி பண்டிகையின் போது விஷ்ணுவின் அவதாரங்களால் பல பேய் பிசாசுகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. 


ஹோலி பண்டிகை ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பிருந்தாவன வாசியான ஸ்ரீ ராதா ராணியின் அன்பின் தொடக்கத்தின் ஒரு அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது. மற்றொரு கதையும் உள்ளது. சிவபெருமானின் கோபத்தால், அவரது மூன்றாவது கண்ணால் பஸ்மமாகிப்போன காமதேவன் ஹோலியில் தான் மறுஜென்மம் எடுத்தார் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஹோலி அன்பின் பண்டிகையாகக் கருதப்படுகிறது.


மேலும் படிக்க | இந்த வாரம் உருவாகின்றன 3 ராஜ யோகங்கள்: யாரெல்லாம் பயன் பெறுவார்கள்?