ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளை பிடித்து ஆட்சி அமைக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி முதல்முறையாக அமைக்கிறது. உத்தரபிரதேசத்தில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக மகுடம் சூடியுள்ளார். 403 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜக 250 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 120 இடங்கள் வரை பெற்றுள்ளது.கோவாவில் தொங்கு சட்டமன்றம் தான் என கருத்துக் கணிப்புகளில் சொல்லப்பட்ட நிலையில், பாஜக அங்கு ஆட்சியை பிடித்துள்ளது. உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரிலும் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. பஞ்சாப்பில் மட்டுமே ஆம் ஆத்மியிடம் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.
காங்கிரஸ் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்காமல் தோல்வியை தழுவியுள்ளது. இத்தனைக்கும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி களத்திற்கே சென்று ஆதரவு தெரிவித்தனர். அதோடு தொடர்ந்து பாஜகவை நேரடியாக விமர்சித்து வந்தனர். ஆனாலும் காங்கிரஸ் எங்கும் ஆட்சியை பிடிக்கவில்லை.
சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. 403 தொகுதிகளைக் கொண்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக தான் வலுவாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அங்கு 4-வது இடத்தில் தான் உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 7.53 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி கடந்த 2017-ல் 6.3 சதவீதமாக குறைந்தது. தற்போது அது மேலும் சரிந்துள்ளது.
மேலும் படிக்க | சொந்த கட்சியை வேறலெவலில் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்... வைரலாகும் ட்வீட்!
80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 2 இடங்களைத்தான் பிடித்தது. அதேபோல 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது 403-ல் 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பிடித்துள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 125 இடங்களைப் பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார். ஆனால் சோனியா காந்தி அதற்கு சம்மதிக்கவில்லை.
மேலும் படிக்க | 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள்..!
மம்தா பேனர்ஜியும் சோனியா காந்தியை சந்தித்து கூட்டணி குறித்து பேசியும் எந்த பயனும் இல்லை. தற்போது இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாஷ் அவுட் ஆகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜக அசைக்க முடியாத சக்தியாக உருவாகி வருவதை காங்கிரஸ் உணர வேண்டும் என்றும், மாநில கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவை எதிர்க்க பலமான அணியை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. என்ன முடிவை எடுக்கும் காங்கிரஸ் தலைமை? தோல்வியில் இருந்து பாடம் கற்பார்களா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR