Holi: விவசாய சட்டங்களின் நகல்களை எரித்து "ஹோலி" கொண்டாடும் விவ்சாயிகள்

டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை "ஹோலிகா தஹான்" என்ற பாரம்பரிய நிகழ்வை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் புதிய விவசாய  சட்டங்களின் நகல்களை எரித்ததாக  சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. 

Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2021, 09:08 PM IST
  • டெல்லியில் விவசாய சட்டங்களின் நகல்கள் எரிப்பு
  • ஹோலிகா பூதகியை எரிப்பது போல் மத்திய அரசின் விவசாய சட்டங்கள் எரிக்கப்பட்டன
  • FCI அலுவலகங்கள் 6 மணி நேரம் முற்றுகையிடப்படும்
Holi: விவசாய சட்டங்களின் நகல்களை எரித்து "ஹோலி" கொண்டாடும் விவ்சாயிகள் title=

புதுடெல்லி: டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை "ஹோலிகா தஹான்" என்ற பாரம்பரிய நிகழ்வை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் புதிய விவசாய  சட்டங்களின் நகல்களை எரித்ததாக  சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. 

வழக்கமாக ஹோலி பண்டிகையின் போது, தீமூட்டி அதில் தேவையில்லாதவற்றை போட்டு எரிப்பார்கள். ஹோலிகா என்ற அரக்கியை தகனம் செய்வதாக பொருள் கொள்ளப்படும் இந்த நிகழ்வில் நாட்டுக்கு தேவையில்லாதது இந்த விவசாய சட்டம் என்று பொருள் கொள்ளுமாறு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லையில் ஹோலி கொண்டாடினார்கள். விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து தனி சட்டம் (minimum support price (MSP)) இயற்றப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவ்சாய அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | இந்தியா-இங்கிலாந்து ODI தொடரில் புதிய சாதனை

உழவர் தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணியான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha (SKM)) ஏப்ரல் 5 ஆம் தேதி "எஃப்சிஐ  காப்பாற்றுங்கள்" என்ற பொருள்படும் கடைபிடிப்பதாகவும், இந்திய உணவுக் கூட்டமைப்பின் (எஃப்.சி.ஐ) அலுவலகங்கள் காலை 11 மணி முதல் 5 மணி வரை சுற்றி வளைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) மற்றும் பொது விநியோக முறை (பி.டி.எஸ்) ஆகியவற்றை மறைமுகமாக முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் FCIக்கான பட்ஜெட்டும் குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், எஃப்.சி.ஐ பயிர்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளையும் மாற்றியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.  

Also Read | Michael Vaughan: இந்தியா தற்காப்புடன் பேட்டிங் செய்வது உண்மையா?

விவசாயிகளின் கிளர்ச்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்டு, ஹரியானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ’2021 ஆம் ஆண்டு பொது ஒழுங்கு மசோதாவுக்கும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

"இது ஆபத்தான ஏற்பாடாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு நிச்சயமாக ஆபத்தானது என்பதை நிரூபிக்கும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News