வீடு வாங்குவது அல்லது கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு. ஆனால் கடந்த சில வருடங்களாக சொத்து விலைகள் எகிறிக் கிடக்கும் விதத்தில், ஒரு சாமானியர் தன் வருமானத்தில் வீடு வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் வீட்டுக் கடன் மூலம் தங்கள் வீட்டுக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு இதுவே காரணம். ஆனால் வீட்டுக் கடன் வாங்கும் முன் அதன் வட்டி எவ்வளவு என்பதை பார்த்தால் மட்டும் போதாது. அது தொடர்பான மற்ற அனைத்து விஷயங்களையும் புரிந்துகொள்வது முக்கியம். நீங்களும் முதல் முறையாக வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால், வீட்டுக் கடன் தொடர்பான சில முக்கியமான குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடன் வாங்குவதற்கு முன் உங்கள் நிதி நிலையைச் சரிபார்க்கவும்


வீட்டுக் கடனைப் பெறுவதற்கு முன் நீங்கள் கொஞ்சம் முன்பணம் செலுத்த வேண்டும். இது சொத்தின் மொத்த செலவில் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை இருக்கலாம். மேலும், கடன் வாங்கிய பிறகு, உங்கள் மாதாந்திர தவணை ஒவ்வொரு மாதமும் தொடங்கும், இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சொந்த நிதி நிலையை ஒருமுறை நன்றாகப் பார்க்க வேண்டும். அதனால் பிற்காலத்தில் எந்த விதமான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய நிலை வராமல் இருக்கும்.


கடன் தொகையை இப்படி நிர்ணயம் செய்யுங்கள்


கடனைப் பெறுவதற்கு முன், அனைத்துத் தேவைகளையும் பொறுப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எவ்வளவு தவணையை எளிதாகச் செலுத்தலாம் என்பதை ஒருமுறை கணக்கிட வேண்டும். இதற்குப் பிறகுதான் நீங்கள் கடனாக எவ்வளவு தொகை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். எளிமையான விதி என்னவென்றால், உங்கள் EMI உங்கள் டேக் ஹோம் சேலரியில் 40% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.


கடன் அம்சங்களை ஒப்பிடுக


கடன் வாங்கும்போது நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும். இது உங்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் கடன் அனுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பல நேரங்களில் நல்ல கிரெடிட் ஸ்கோரில் சிறந்த வட்டி விகிதத்தில் கடன்களும் கிடைக்கும். இது தவிர, வெவ்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள், கடன் தொகை, LTV விகிதம், கடன் காலம் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் ஆகியவற்றில் வேறுபாடு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், வங்கிகளின் கடன் அம்சங்களை ஒப்பிட்டு, பின்னர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு இலவசமாக கிடைக்கும் ‘சில’ வசதிகள்!


முன்பணம் (டவுண் பேமெண்ட்) செலுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்


உங்கள் நிதி நிலை நன்றாக இருந்தால், வீட்டுக் கடனுக்கான முன்பணம் செலுத்துங்கள். இது உங்கள் கடன் ஒப்புதல் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. சில கடன் வழங்குநர்கள் குறைந்த எல்டிவி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கும் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள். ஆனால் அதிக முன்பணம் செலுத்த உங்கள் அவசர கால நிதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.


அவசர கால நிதியில் இந்த தொகை இருக்க வேண்டும்


நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக அவசரகால நிதியை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். இது உங்கள் 6 மாத EMI தவணைகளுக்கு சமமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் வேலை இழப்பு அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலை காரணமாக EMI-யை செலுத்துவது கடினமாகிவிடும். இது அபராதம் மற்றும் உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு சேதம் விளைவிக்கும். இங்குதான் உங்கள் அவசர கால நிதி உதவிக்கு வரும்.


மேலும் படிக்க | டோல் பிளாசா விதிகள் மாற்றம்: நெடுஞ்சாலையில் பயணிப்பவருக்கு மகிழ்ச்சியான செய்தி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ