அக்குள் கருமையை அழகாக நீக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள் போதும்..
Home Remedies For Dark Under Arms : பலருக்கு, அக்குள் கருமை என்பது பெரிய பிரச்சனையாக தாேன்றும். அவர்கள் அதை நீக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Home Remedies For Dark Under Arms : கை ஸ்லீவ் அற்ற ஆடைகளை போடும் போதும், கைக்குட்டியாக இருக்கும் ஆடைகளை போடும் போதும் பல பெண்கள் மிகவும் அசெளகரியமாக உணருவர். காரணம், அக்குள் கருமையாக இருக்கலாம். இந்த அக்குள் கருமையை நீக்க, நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மென்மையான ஸ்க்ரப்:
பொதுவாக முகம், பாதங்கள் என எந்த மென்மையான உடல் பாகமாக இருந்தாலும் அங்கிருக்கும் கருமையையும் அழுக்கையும் போக்குவதற்கு ஸ்க்ரப் பயன்படுத்தலாம். அக்குளில் கருமை வருவது, அங்கு படிந்திருக்கும் அழுக்கினால்தான் எனக்கூறப்படுகிறது. இதனால், ஸ்க்ரப் வைத்து வாரத்தில் 2 அல்லது 3 முறை ஸ்க்ரப் வைத்து சுத்தம் செய்யலாம். இந்த ஸ்க்ரப்பை வீட்டில் இருக்கும் சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை வைத்து செய்யலாம். இதனால், இறந்து போன ஸ்கின் செல்களை அக்குளில் இருந்து நீக்கலாம்.
எலுமிச்சை ஜூஸ்:
புதிய எலுமிச்சையை வைத்து, அக்குள் கருப்பாக இருக்கும் பகுடியில் 10 நிமிடம் வரை தேய்த்து பின்பு கழுவலாம். இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கருமையை போக்க உதவும் என பயன்பெற்றவர்கள் கூறுகின்றனர்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை கட் செய்து, அதில் ஒரு பீஸை மட்டும் எடுத்து அக்குள் கருமையாக இருக்கும் இடத்தில் தேய்க்கலாம். இதில் இயற்கையான ப்ளீச்சிங் சத்து இருக்கிறதாம்.
(இவை இரண்டையும் செய்யும் முன்பு மருத்துவர்களை பரீசீலனை செய்யவும்)
மாய்ஸ்ட்ரைசர்:
சருமம் வரண்டு போவதாலும் அக்குளில் கருமை ஏற்படும். எனவே, அதை ஈரப்பதமாகவும், காய்ந்து போகாமலும் வைத்துக்கொள்ள பாதாம் எண்ணெய், ஆல்கஹால் இல்லாத பாடி ஸ்ப்ரே ஆகியவற்றை உபயோகிக்கலாம். இது, அக்குள் கருமையாகாமல் பார்த்துக்கொள்வதோடு, வியர்வை நாற்றமும் வெளியேறாமல் தடுக்கிறது.
மேலும் படிக்க | முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?
ஷேவிங்:
சிலர், அடிக்கடி அக்குளில் ஷேவிங் ச்யெவர். இதனால், பல சமயங்களில் அக்குள் கருமை போகமலேயே இருக்கும். எனவே, வேக்ஸிங், லேசர் முடி நீக்குதல் உள்ளிட்டவற்றை தகுந்த ஆலோசனைக்கு பின்பு பின்பற்றலாம். இது, ஷேவ் செய்வதை விட மிகுந்த பயன் கொடுப்பதாக கூறப்படுகிறது.
உடுத்தும் ஆடை:
எப்போதும், வியர்வை வெளியேறாத ஆடைகளை அணிய கூடாது. இதனாலும், அக்குள் கருமையடையலாம். உங்களுக்கு உத்துவதற்கு ஏதுவான ஆடைகளையும், இருக்கமாக அல்லாத ஆடைகலையும் தேர்ந்தெடுக்க வேண்டும். வெயில் காலங்களில் காட்டன் உள்ளிட்ட ஆடைகளை உடுத்தி, பாலிஸ்டர் போன்ற காற்றுப்புகாத ஆடைகளை தவிர்ப்பது சிறந்ததாகும்.
மருத்துவரின் ஆலோசனை:
உங்கள் அக்குள் கருமை நீண்ட நாட்கள் ஆகியும் நீங்கவில்லை என்றாலோ, சருமத்தில் வேறு மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டாலோ உடனே தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. கூடவே, நன்றாக தண்ணீர் குடித்து சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.
மேலும் படிக்க | பெண்கள் தன்னம்பிக்கையை வளர்க்க 8 வழிகள்! செய்து பாருங்கள்..
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ