முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?

Skin Plus Hair Care Tips For Dandruff And Pimple Removal : உங்கள் முகத்தில் பருக்களா?தலையில் அதிக பொடுகு இருக்கிறதா?  இனி கவலையை விடுங்கள்..  

Written by - Yuvashree | Last Updated : Sep 27, 2024, 03:31 PM IST
  • சருமம் மற்றும் முடி பரமாரிப்பு டிப்ஸ்!
  • முகப்பருவை போக்கலாம்..பொடுகை போக்கலாம்
  • இரண்டுக்கும் ஒரே வழி..
முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?  title=

Skin Plus Hair Care Tips For Dandruff And Pimple Removal : முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்கவும், தலைப் பொடுகு சரிசெய்யவும்  இப்போது ஒரு குட்டி டிப்ஸ். பொதுவாக நாம் தினமும்  இரண்டு  முறை  முகம் கழுவது வழக்கம், அதிலும் சோப், ஃபேஸ் வாஷ் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோம். முகத்தில் மூன்று விதமான தோல் உள்ளது. அதனை ஹெபிடெர்மிஸ்,டெர்மிஸ்,ஹைபோடெர்மிஸ் என்று கூறுவர்.

அனைவருக்கும் முகத்தில் ஒரே விதமான சருமம் இருப்பதில்லை. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட சருமம், சாதாரண சருமம் போன்ற வகைகள் இருக்கிறது.  எண்ணெய் வடியும் முகம் இருக்கும் நபர்களுக்கு அதிகமாக முகப்பருக்கள் வரும். அவர்கள் கண்டிப்பாகத் தினமும் முகத்தை எண்ணெய் வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இது எண்ணெய் வடியும் முகம் வைத்திருப்பவருக்குக் கொஞ்சம் கடுப்பாகத்தான்  இருக்கும்.

முகப்பருக்களை போக்க டிப்ஸ்:

தினமும் கட்டாயமாக காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும். பின் உடற்பயிற்சி செய்வது நல்லது. துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் இருக்கும் உணவைத் தவிர்த்தால் நல்லது. இல்லை என்றால் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி உணவு தயாரித்துச் சாப்பிடலாம்.
நல்லெண்ணெயை உணவில் சேர்த்துச் சமைத்தால் இன்னும் நல்லது.

மேலும் படிக்க | சருமம் மினுமினுக்கனுமா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள்

Skin Care

இரண்டு பிரச்சனைகளையும் சரிசெய்ய ஒரே வழி!

  • வாரத்திற்கு இரண்டு முறை தலையில் வேப்பிலையை, வெங்காயத்துடன் சேர்த்து அரைத்து அதன்பின் சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சூடுபடுத்தி அரைத்த வேப்பிலை மற்றும் வெங்காயத்தை எண்ணெய்யுடன் சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்துவிடுங்கள்.
  • பிறகு அந்த பேஸ்டை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • நம் தலையைச் சிறிது ஈரப்பதமாக்கி பிறகு நாம் ஊறவைத்த பேஸ்டை தலையில் வேர்ப் பகுதியிலிருந்து அனைத்து பகுதியிலும் இந்த பேஸ்டை அப்ளை செய்துவிடுங்கள்.
  • சரியாக 10 நிமிடம் மட்டும்தான் இதை ஊறவைக்க வேண்டும். ஏனென்றால் இது  மிகவும் குளிர்ச்சியுடையதால் அதிக நேரம் கட்டாயம் இதை ஊற வைக்கக் கூடாது. 
  • ஊறவைத்தபின்  தலையின்  வேரில்  மஸாஜ் செய்து  நல்ல தண்ணீரில் வாஷ் செய்யுங்கள்.
  • இதைப்பயன்படுத்தும்போது எந்தவிதமான ஷாம்பூ,கண்டிஷ்னர் போன்றவை  உபயோகிக்கக் கூடாது. குறிப்பாகப் பேஸ்ட் பயன்படுத்தும் போது தவிர்த்துவிடுங்கள்.
  • இதை நாம் மாதத்திற்கு மூன்று முறை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. மேலும்  இதை அடிக்கடிப் பயன்படுத்தி வந்தால் உடல் மிகவும் குளுமையாகிக் காய்ச்சல் ஏற்படும்...
  • இந்த பேஸ்டை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
  • முகத்தில் எண்ணெய் வடிபவர்கள்தான் இதைப் பயன்படுத்தலாமா? 
  • இல்லை, அனைவரும் இதைப் பயன்படுத்தலாம் . உடல் சூடு இருப்பவர்கள் சூட்டைத் தணிக்க பயன்படுத்தலாம்.
  • தலையில் பொடுகு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம். 
  • தலை முடி வலுப்பெறவும், முடிகொட்டாமல் இருக்கவும் இது உதவியாக இருக்கும்.
  • முகத்தில் எண்ணெய் வடிபவர்களும், தலையில் பொடுகு வைத்திருப்பவர்களும்  கட்டாயம் இதைப் பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மேலும் படிக்க | சருமம் இயற்கையாகவே பொலிவு பெற வேண்டுமா... இந்த 5 பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News