Honda Car Offers July 2021: ஹோண்டா கார் பிரியர்களுக்கு ஜூலை மாதம் அட்டகாசமான மாதமாக இருக்கும். ஆம்!! ஹோண்டா கார் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதத்தில் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2021 ஜூலை 31 வரை நிறுவனத்தின் மூன்று மாடல்களில் சிறப்பு மான்சூன் சலுகை (Honda Car Monsoon Offers) வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நீங்கள் மலிவான விலையில் கார்களை வாங்க முடியும்.


ஹோண்டா கார்களில் ரூ .39000 வரையிலான சலுகை 


அமேஸ், ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி ஆகிய மூன்று ஹோண்டா (Honda https://zeenews.india.com/tamil/lifestyle/best-electric-scooters-hero-and-honda-to-launch-2-new-evs-87-km-range-on-full-charge-365316) மாடல்களில் ஜூலை 31 வரை மிகச்சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, இதில் ரூ .39000 வரையிலான நன்மைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அமேஸில் அதிகபட்ச நன்மை கிடைக்கிறது.


ALSO READ:Honda Alert: கார் வாங்கப்போறீங்களா? அடுத்த மாதம் கார் விலை அதிகரிக்கும்!! https://zeenews.india.com/tamil/lifestyle/alert-buy-honda-car-now-if-in-plan-as-honda-car-prices-may-go-high-in-august-366063


ஹோண்டா அமேஸில் உள்ள சலுகைகளின் விவரம்


மொத்தம் ரூ .39,243 வரையிலான நன்மைகளை நீங்கள் இந்த மாதம் ஹோண்டா அமேசில் பெற முடியும். VMT மற்றும் VXMT Petrol பெட்ரோல் (Petrol) வகைகளில் ரூ .5 ஆயிரம் வரை ரொக்க தள்ளுபடி, ரூ .10,000 வரையிலான பரிமாற்ற சலுகை கிடைக்கிறது. SMT Petrol Grade-ல் ரூ .20 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, எஃப்ஓசி அக்சசரீஸ் சலுகையாக ரூ .24,243 மற்றும் கார் (Cars https://zeenews.india.com/tamil/lifestyle/get-heavy-discounts-on-honda-cars-features-and-price-is-also-great-361302) பரிமாற்றத்திற்கு ரூ .15,000 வரை வழங்கப்படுகின்றன. 


WR-V இல் உள்ள சலுகைகள் 


ஹோண்டா WR-V இல் நீங்கள் ரூ .16,058 அளவிலான நன்மையைப் பெறலாம். இதில், நீங்கள் ரூ .5000 வரை ரொக்க தள்ளுபடி அல்லது ரூ .6,058-க்கான எஃப்ஓசி அக்சசரீஸ் சலுகையைப் பெறலாம். இது தவிர, 10 ஆயிரம் மதிப்பிலான கார் பரிமாற்ற சலுகையும் கிடைக்கிறது. 


ஹோண்டா ஜாஸில் என்ன சலுகை உள்ளது


நீங்கள் ஹோண்டாவின் ஜாஸ் காரை வாங்க விரும்பினால், அதை ரூ .16,095 லாபத்தில் வாங்கலாம். இதில், உங்களுக்கு 5000 ரூபாய்க்கான ரொக்க தள்ளுபடி அல்லது 6.095 ரூபாய்க்கான எஃப்.ஓ.சி அக்சசரிஸ் மற்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கான கார் பரிமாற்ற சலுகை (Exchange Offer https://zeenews.india.com/tamil/technology/honda-activa-6g-bumper-offer-get-rs-5000-cashback-and-much-more-356873) ஆகியவை கிடைக்கும். 


மூன்று மாடல்களின் எக்ஸ் ஷோரூம் விலைகள்
டெல்லியில் ஹோண்டா அமேஸின் விலை ரூ .6,22,439. ஹோண்டா ஜாஸின் விலை ரூ .7,55,337 மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-ரின் விலை ரூ .62 238 ஆகும். வெவ்வேறு நகரங்களில் இவற்றின் விலைகளில் சிறிய மாறுபாடுகள்  இருக்கலாம்.


ALSO READ: Electric Scooter சந்தையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Honda வின் Benly e https://zeenews.india.com/tamil/lifestyle/honda-electric-scooter-benly-e-to-be-the-next-big-thing-in-india-check-features-other-details-365875


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR