இந்தோனேஷியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்த வா திபா என்ற பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வியாழக்கிழமை இந்தோனேஷியா கிராமத்தைச் சேர்ந்த வா திபா (51) தன்னுடைய தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். தோட்டத்திற்கு சென்ற வா திபா இரவுமுழுவதும் வீட்டிற்கு திரும்பவில்லை.


இதையடுத்து அவரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக தோட்டத்துக்குச் சென்று அவரைத் தேடியபோது, அங்கு 23 அடிக்கொண்ட மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாது உருண்டு வந்து உள்ளது.


இதனையடுத்து சந்தேம் அடைந்த உறவினர்கள் அந்த 23 அடி மலைப்பாம்பைக் கொன்று, அதன் வயிற்றுப்பகுதியைக் கத்தியால் வெட்டி பார்த்தத்தில் வா திபா உள்ளே சடலமாக இருந்து உள்ளார். 


மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வா திபாவின் செருப்பு கிடந்து உள்ளது. அவருடைய தலையை முதலில் விழுங்கியுள்ள பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்து உள்ளது.