கணவன்-மனைவி சண்டை போட்ட பின் சமாதானம் ஆவது எப்படி? சிறப்பான டிப்ஸ்!
கணவன்-மனைவிக்குள் சண்டை வந்த பிறகு அவர்கள் எப்படி சமாதானம் செய்து கொள்வது? இதோ அதற்கான டிப்ஸ்!
திருமண உறவில் மட்டுமல்ல, அனைத்து உறவுகளிலும் கருத்து வேறுபாடுகள் வருவதும், அதன் பிறகு சண்டை எழுவதும் மிகவும் சகஜமான விஷயமாகும். திருமண உறவு என்று வரும் போது, இந்த சண்டை மென்மையாகவும் முடியலாம், அல்லது வெகு தீவிரமும் அடையலாம். எனவே, சண்டைக்கு பிறகு ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
இருவருக்கும் நேரம் ஒதுக்கி கொள்வது:
கருத்து மோதல் ஏற்பட்டு, உங்கள் பார்ட்னருடன் சண்டை முடிந்த பிறகு ஈருவரும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கி கொள்வது மிகவும் முக்கியமாகும். சண்டைக்கு பிறகு உணர்ச்சிகள் அனைத்தும் மிகவும் அதிகமாக இருக்கும், அப்போது நம் வாயில் இருந்து பிறக்கும் வார்த்தைகள் பின்னாளில் நம்மை கஷ்டப்பட வைக்கலாம். எனவே, அந்த சண்டைக்கு பிறகு நேரம் ஒதுக்கி இருவரும் நீங்கள் பேசியது குறித்து சிந்திப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
உணர்ச்சிகள்:
சண்டைக்கு பிறகு, உங்களுக்கு என்னனென்ன உணர்ச்சிகள் தோன்றுகிறதோ அவை அனைத்தையும் முழுமையாக உணர்வது உங்களின் பொறுப்பாகும். அதனிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்யாமல், அது உங்களுக்கு என்ன கூற வருகிறது என்பதை கேளுங்கள். இதுதான், உங்களை அவசரப்பட்டு எதுவும் செய்ய விடாமலும் தடுக்கும். இந்த உணர்ச்சிகளின் வெளிபாடு என்னவோ, அதை உங்களின் பார்ட்னரிடமும் கலந்து ஆலோசனை செய்யலாம்.
சரியான வார்த்தைகளை பயன்படுத்துதல்:
உங்கள் உணர்ச்சிகளை தெரிவிக்க, சரியான வார்த்தைகளை உபயோகப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். உங்கள் பார்ட்னரின் செயலால் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை தெரிவியுங்கள். அப்படி பேசும் போது ‘நான், எனக்கு’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்கவும். உங்கள் பார்வையில் இருந்து நீங்கள் இதையெல்லாம் தெரிவிக்கும் போது, அவர்களாலும் உங்கள் பார்வையில் இருந்து அவர்களை பார்க்க முடியும்.
பிரேக் எடுத்து கொள்ளுதல்:
உங்களுக்குள் ஏற்பட்ட சண்டை பெரிதாக முடிந்தால், சில நாட்கள் அவர்களை பார்க்காமல் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வது நல்லதாகும். இது, உங்கள் திருமண வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறது என எடை போடுவதற்கும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளவும் உதவும்.
மேலும் படிக்க | உங்கள் மனைவி அல்லது காதலியிடம் இந்த விஷயத்தை மட்டும் கேட்க வேண்டாம்!
மன்னிப்பு கோருதல் :
மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிப்பவன் பெரிய மனிதன் என திரைப்படங்களில் கூறுவர். இதை பின்பற்றி, உங்கள் பார்ட்னரிடம் நீங்களே சென்று மன்னிப்பு கேளுங்கள். சண்டை நேரும் போது கண்டிப்பாக இரு பக்கமுமே தவறு இருக்கும். இதில் உங்கள் பக்கம் என்ன தவறு இருக்கிறதோ அதற்கான மன்னிப்பை மட்டும் கேளுங்கள். கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, மென்மையாக புன்னகைப்பது போல எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அந்த மன்னிப்பு இருக்கலாம்.
எதிர்காலம் குறித்து சிந்திப்பது:
சண்டை முடிந்து, சமாதானம் ஆன பின்பு, இனி வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று யோசனை செய்யுங்கள். இந்த சண்டையில் என்ன தவறு செய்தீர்களோ அதை இனி வரும் காலத்தில் செய்ய கூடாது என்று ஒருவருக்கொருவர் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். சண்டையிடுவது போன்ற சூழல் இனி வந்தால், அதை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் பேசுங்கள். இது, கணவன் மனைவிக்குள் என்ன பிரச்சனை வந்தாலும் பெரிய விரிசல் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ