ஆதார் அட்டையில் எத்தனை முறை பெயர் மற்றும் முகவரியை மாற்றலாம்?
ஒருவர் எத்தனை முறை ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரியை மாற்றிக்கொள்ளலாம் என்று UIDAI சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
தற்போது ஆதார் அட்டையின் பயன்பாடும் அவசியமும் அதிகரித்து வருகிறது, முன்னர் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை தான் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது எல்லாவற்றிற்கும் ஆதார் அட்டை தான் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டையை தான் நமது முக்கியமான அடையாளமாக கேட்கின்றனர், அந்த அளவுக்கு இது நமது வாழ்வின் முக்கிய அங்கமாகி மாறிவிட்டது. ஆதார் அட்டை இல்லாமல், நமது முக்கியமான பல பணிகள் முழுமையடையாமல் போகும் வாய்ப்பு கூட ஏற்படும், அதுமட்டுமல்லாது ஆதார் அட்டை இல்லாவிடில், பல அரசுத் திட்டங்களிலிருந்தும் நம்மால் நன்மை பெற முடியாமல் போய்விடுகிறது. அதனால் ஆதார் அட்டையின் தேவைகள் மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நாம் அதில் தேவையான மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்பை செய்யவேண்டியது அவசியமானதாகும்.
மேலும் படிக்க | எல்ஐசி ஐபிஓ-க்காக ஞாயிற்றுக்கிழமையும் இந்த வங்கிக்கிளைகள் திறந்திருக்கும்: ஆர்பிஐ
ஒருவருக்கு பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பலமுறை வீடு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு நாம் இடமாற்றம் செய்ய நேரிடும்போது நமது ஆதார் அட்டையில் உள்ள முகவரியையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் உங்கள் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட முகவரியில் ஏதேனும் சிறிய மாற்றத்தை நீங்கள் மேற்கொள்ள விரும்பலாம், அதே சமயம் ஆதார் அட்டையில் ஒருமுறை மட்டுமே முகவரியை மாற்ற முடியும் என்பதை நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தான் மக்களுக்கு ஆதார் அட்டையை வழங்குகிறது. மேலும் இந்த ஆணையம் தான் நமது ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்களைச் செய்ய அனுமதியினை வழங்குகிறது. அதே சமயம் உங்களால் ஆதார் அட்டையில் மீண்டும் மீண்டும் மாற்றங்களை செய்துகொள்ள முடியாது என்பதை எப்போதும் நீங்கள் நியாபகத்தில் வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டையை மாற்றுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு UIDAI ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது, அதன்படி தான் நீங்கள் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்யமுடியும். ஆதார் அட்டையில் உங்கள் பெயர் தவறாக இருந்தாலோ, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் அவர்களது ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய விரும்பினாலோ அவர்களால் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் ஒருவரால் இரண்டு முறை மட்டுமே பெயர்களை திருத்தவோ அல்லது புதுப்பித்து கொள்ளவோ முடியும். இரண்டு முறைக்கு மேலும் நீங்கள் இதில் ஏதேனும் மாற்றத்தை செய்ய விரும்பினால் நேரடியாக UIDAI அலுவலகத்திற்கு தான் செல்ல வேண்டும்.
மேலும் படிக்க | RBI அறிவிப்பால் அதிர்ந்துபோன பங்குச்சந்தை: முழி பிதுங்கிய முதலீட்டாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR