RBI அறிவிப்பால் அதிர்ந்துபோன பங்குச்சந்தை: முழி பிதுங்கிய முதலீட்டாளர்கள்

Share Market Crash: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதால், விற்பனையின் போது சந்தையில் பெரும் அதிர்வு காணப்பட்டது. ரிசர்வ் வங்கி விகித உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 ஆகவும், நிஃப்டி 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 ஆகவும் முடிவடைந்தன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2022, 04:21 PM IST
  • பங்குச்சந்தையில் கடும் சரிவு.
  • ரிசர்வ் வங்கி அறிவிப்பின் எதிரொலி.
  • அனைத்து துறை குறியீடுகளும் சரிவில் முடிவடைந்தன.
RBI அறிவிப்பால் அதிர்ந்துபோன பங்குச்சந்தை: முழி பிதுங்கிய முதலீட்டாளர்கள் title=

பங்குச் சந்தை புதுப்பிப்புகள்: வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தையில் காலை வர்த்தகம் நேர்மறையாக ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று எல்ஐசியின் ஐபிஓ திறக்கப்பட்டதால் முதலீட்டாளர்களும் உற்சாகமடைந்தனர். 

ஆனால் மதியம், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதால், விற்பனையின் போது சந்தையில் பெரும் அதிர்வு காணப்பட்டது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து 55,501 புள்ளிகளுக்கு குறைந்தது.

ரிசர்வ் வங்கி விகித உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 ஆகவும், நிஃப்டி 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 ஆகவும் முடிவடைந்தன.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி வங்கிக் குறியீடு 2.5% சரிந்தது, நிதிக் குறியீடு 2.6% சரிந்தது. நிஃப்டி ரியால்டி குறியீடு 3.3% இழந்தது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டால், அது இந்த துறைகளை பாதிக்கும் என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. 

மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம் 

ரெப்போ விகிதத்தின் அதிகரிப்பு தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் தொற்றுநோய்க்கு பிந்தைய சூழலில் குடியிருப்பு தேவை சாதகமாக புத்துயிர் பெற்றுள்ளது. இது பேணப்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையின் வற்றாத நம்பிக்கை குறைந்த வட்டி விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது மலிவு விலையை மேம்படுத்துகிறது மற்றும் பல தொழில்களுடன் இணைந்த ரியல் எஸ்டேட் துறையுடன் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உந்துதலையும் வழங்குகிறது.

இன்றைய பங்குச்சந்தை முடிவில், அனைத்து துறை குறியீடுகளும் சரிவில் முடிவடைந்தன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 2.63 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 2.11 சதவீதமும் சரிந்தது.

ரெப்போ விகிதம் 4.40% ஆனது

முன்னதாக, பிற்பகல் 2 மணியளவில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தார். ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.40% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடன் இஎம்ஐ அதிகரிக்கும்

ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி செய்துள்ள மாற்றம் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. ரெப்போ விகிதம் அதிகரிப்பால், வரும் நாட்களில் உங்கள் வீட்டுக் கடன், கார் கடன் ஆகியவற்றின் இஎம்ஐ அதிகரிக்கும். முன்னதாக, நடப்பு நிதியாண்டின் முதல் பண மதிப்பாய்வு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து 11வது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் இருந்தது. 

மேலும் படிக்க | LIC IPO: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ இன்று துவக்கம், ஆவலுடன் காத்திருக்கும் முதலீட்டாளர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News