How To Achieve Your Dreams In Simple Ways : தூங்கும் போது வருபவை கனவுகள் அல்ல..நம்மை தூங்கவிடாமல் செய்வது எதுவோ..அதுவே லட்சிய கனவுகள் என மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூற கேட்டிருப்போம். எவ்வளவு உண்மையான வாக்கியம் இது? நம் வாழ்வின், பல்வேறு பருவங்களில் கனவுகளானவை வரும் போகும். ஒரு சிலருக்கு ஒரே கனவு வெவ்வேறு ரூபங்களை எடுக்கலாம், ஒரு சிலர் தங்களது கனவுகளையும் அதை நோக்கி ஓடும் தங்களின் பாதைகளையும் மாற்றிக்கொண்டே இருப்பர். எப்படியோ, உங்களுக்கு ஏதேனும் ஒரு கனவாவது இருக்கும் அல்லவா? அதை கண்டிப்பாக நனவாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இங்கு அதற்கான படிகளை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படம்பிடித்து பார்ப்பது:


உங்கள் எதிர்காலத்தை குறித்து நினைத்து பார்க்கும் போது உங்களுக்கு குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். அதே சமயத்தில், கொஞ்சம் பயமாகவும் இருக்கலாம். இது அனைத்துமே நார்மல்தான். இந்த உலகிலேயே மிகவும் ஆபத்தான ஆனால் உற்சாகமான விளையாட்டு எது தெரியுமா? நம் வாழ்க்கைதான். அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என்பதே நமக்கு தெரியாது. இப்படிப்பட்ட விளையாட்டை விளையாடும் போது, நாம் எதைப்பற்றி யோசிக்கிறோமோ, அதைதான் நிகழ்காலத்திலும் நடத்தி காட்டுவோம். உதாரணத்திற்கு உங்கள் கனவில் நீங்கள் தோற்றுப்போவீர்கள் என்று நினைத்துக்கொண்டே இருந்தால் நீங்கள் உண்மையாகவே தோற்றுப்போக 100% வாய்ப்பு இருக்கிறது. எனவே, உங்கள் கனவு குறித்து பாசிடிவாக தினமும் உங்கள் மனதிற்குள் காட்சி படுத்திக்கொள்ளுங்கள். 


கடந்த காலம் குறித்த புரிதல்:


நம் வருங்காலம் குறித்து நமக்கு நல்ல யோசனைகள் இருக்கிறது என்றால், கடந்த காலம் நன்றாக இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த எதிர்காலம் கடினமானவையாக இருக்கலாம். அதை மறப்பது நல்லதுதான் என்றாலும், அவை உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடங்களை நீங்கள் என்றுமே மறக்க கூடாது. அவைதான் இப்போது உங்கள் கனவை நோக்கி ஓட உங்களை தூண்டியிருக்கிறது என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | எளிதில் வேலை கிடைக்க எந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.? இந்த டிப்ஸை படிங்க..!


உங்களது சுற்றுப்புறம்:


பல சமயங்களில், உங்கள் பயணத்தில் நீங்கள் மட்டும் தனியாக இருப்பது போல தோன்றும். ஆனால், உண்மையில் உங்கள் வாழ்வில் உங்களை தாண்டி யாரேனும் ஒரு நபர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் உங்களுடன் உங்கள் கனவுகளுக்கு உறுதுணையாக இருப்பர். அது உங்கள் நண்பர்களுள் ஒருவராக இருக்கலாம், அப்படி, உங்கள் கனவுகளுக்கு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நபரை, எப்போதும் கைவிட்டு விடாதீர்கள்.


நேர மேலாண்மை:


நாம் நினைத்த வேலைகளை தகுந்த நேரத்தில் செய்து முடிக்க, நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியமாகும். ஒரு நாளில் நீங்கள் உங்கள் கனவு குறித்து செய்ய வேண்டியவற்றிற்காக ஸ்கெட்டியூல் போட்டு, அத்துடன் சேர்ந்து வேலைகளை செய்யுங்கள். இது, உங்களை வேலையை தள்ளிப்போட விடாமல் செய்வதுடன் நீங்கள் ரிலாக்ஸாக ஒரு வேலையை செய்து முடிக்கவும் உதவுகிறது. 


‘ஏன்’ என்ற கேள்வி!


ஒரு விஷயத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று மனதில் உறுதியுடன் இருக்கிறீர்கள் என்றால், எதற்காக அதனை தேர்வு செய்தீர்கள் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்தி பாருங்கள். அது, நீங்கள் யாரிடமேனும் இருந்து பெற்ற அவமானமாக இருக்கலாம். அந்த கனவை நடத்தி முடிக்க வேண்டும் என்று உங்களுக்கு வைராக்கியம் வருவதற்கு, எது காரணமாக இருந்ததோ அதை மறவாமல் இருங்கள்.


மேலும் படிக்க | தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி..? சிம்பிள் டிப்ஸ் இதோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ