Books About Time Management : சில புத்தகங்கள், நமக்கு நேர மேலாண்மை குறித்து சொல்லிக்கொடுக்கும். அவை என்னென்ன புத்தகங்கள் தெரியுமா?
Books About Time Management : நேரம், காலம் அனைத்துமே யாருக்காகவும் எதற்காகவும் நிற்காது. நேரத்தை விரயம் செய்வது, இப்போது அவ்வளவாக பெரிய விஷயமாக இல்லாமல் தோன்றினாலும், அது பிற்காலத்தில் உங்களை சங்கடப்பட செய்யலாம். எனவே, நேரத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான திறனாகும். இது, உங்களது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவும். அதற்கு உங்களுக்கு உதவும் சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தி ஒன் திங்: கேரி கெல்லர் மற்றும் ஜே பாபசன் எழுதியிருக்கும் புத்தகம், தி ஒன் திங், இந்த புத்தகம், நம் வாழ்வில் எது முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கு உதவும்.
தி நவ் ஹேபிட்: தி நவ் ஹேபிட் புத்தகத்தை, நீல் ஃபியோர் எழுதியிருக்கிறார். இது, நாம் வேலைகளை தள்ளிப்போடும் குணம் கொண்டவராக இருந்தால், இந்த புத்தகம் அந்த பழக்கத்தை களைய உதவும்.
கெட்டிங் திங்க்ஸ் டன்: இந்த புத்தகம், அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று கெட்டிங் திங்க்ஸ் டன். வாழ்வையும் நேரத்தையும் எப்படி கையாள வேண்டும் என்பதை இதை வைத்து கற்றுக்கொள்ளலாம். இதனை டேவிட் ஆலன் எழுதியிருக்கிறார்.
ஃபோர் தௌசண்ட் வீக்ஸ்: ஆலிவர் பர்க்மென் எழுதியிருக்கும் புத்தகம், ஃபோர் தௌசண்ட் வீக்ஸ். இந்த புத்தகம், நாம் எந்த வேலையை முதன்மை படுத்த வேண்டும், எந்த வேலையை ப்ப்புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்பதை இந்த புத்தகம் கற்றுக்கொடுக்கும்.
ஃபர்ஸ்ட் திங்க்ஸ் ஃபர்ஸ்ட்: ஸ்டீஃபன் கவி எழுதியிருக்கும் புத்தகம், ஸ்டீஃபன்.ஆர். இந்த புத்தகம், நமது வாழ்வு குறித்த புரிதலை நமக்கு உணர்த்தும். அது மட்டுமன்றி, வாழ்வில் நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் காண்பிக்கும்.
ஈட் தட் ஃப்ராக்: ஈட் தட் ஃப்ராக் புத்தகத்தில், ஒரு வேலையை தள்ளிப்போடுவதில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள 21 வழிகள் காண்பிக்கப்பட்டிருக்கும். நேரத்தை வீணடிக்கும் பேர்வழிகளுக்கு, இந்த புத்தகம் கண்டிப்பாக உதவும்.
அட்டாமிக் ஹேபிட்ஸ்: அட்டாமிக் ஹேபிட்ஸ் புத்தகத்தை, ஜேம்ஸ் க்ளியர் எழுதியிருக்கிறார். இது, நேரத்தின் ஆளுமை குறித்தும், அது நமது கையில் இருப்பதால் நமக்கு கிடைக்கும் சக்தி குறித்தும் எடுத்துரைக்கும்.