ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும், அதன் அடிப்படையில் ரேஷன் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர, அரசின் திட்ட பலன்களுக்கும் ரேஷன் கார்டு அவசியம். அதேபோல் ரேஷன் கார்டில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். குடும்பத்தில் புதிய மருமகள் அல்லது குழந்தைகள் போன்ற புதிய உறுப்பினர் ஒருவர் இருந்தால், அவர்களின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டியது அவசியம். ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரின் பெயரைச் சேர்ப்பதற்கான முழுமையான செயல்முறையை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி புதிய உறுப்பினர் பெயரைச் சேர்க்கவும்
* ஒரு உறுப்பினர் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்கு வந்தால், முதலில் அவரது ஆதார் அட்டையில் புதுப்பிக்கவும்.
* பெண் உறுப்பினரின் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் சேர்க்கப்பட வேண்டும்.
* குழந்தையின் பெயரை சேர்க்க தந்தையின் பெயர் அவசியம்.
* இதனுடன், முகவரியையும் மாற்ற வேண்டும்.
* ஆதார் அட்டையில் புதுப்பித்த பின், திருத்தப்பட்ட ஆதார் அட்டை நகலுடன், ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, உணவுத் துறை அலுவலர் விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்கள் மார்ச் 31-க்குள் இதை செய்து முடிக்க வேண்டும்


இந்த ஆவணங்கள் குழந்தைகளுக்கு முக்கியமானவை
* வீட்டில் குழந்தை பிறந்தால், முதலில் பிறந்த குழந்தையின் ஆதார் அட்டையை கட்டாயம் தயாரிக்க வேண்டும்.
* இதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படும்.
* அதன் பிறகு, ஆதார் அட்டையில் பெயரைப் பதிவு செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
* மேலே குறிப்பிடப்பட்ட செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
* வீட்டில் அமர்ந்திருக்கும் புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
* இதற்கு, உங்கள் மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
* உங்கள் மாநிலத்தில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்கும் வசதி இருந்தால், வீட்டில் இருந்தபடியே இந்த வேலையைச் செய்யலாம்.


மேலும் படிக்க | அமேசானில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR