Ayushman Bharat Vaya Vandana: நாட்டில்  உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க உதவும் ஆயுஷ்மான் பாரத் வயா வந்தனா என்னும் உடல்நல காப்பீடு திட்டத்தை கடந்த அக்டோபர் மாத இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, சமீபத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஆயுஷ்மான் வய வந்தனா கார்டுகளை பெற மூத்த குடிமக்களின் ஆர்வம் திருப்திகரமாக இருப்பதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, மேலும் மேலும் மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ரூ.40 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சைகளை பெற்று பலர் பயனடைந்துள்ளனர். ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து  இரண்டு மாதங்களுக்குள் ஆயுஷ்மான் பாரத் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 22,000 க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் 29ம் தேதி பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் வயா வந்தனா கார்டுக்கான பதிவு 25 லட்சத்தை எட்டியுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.


ஆயுஷ்மான் வயா வந்தனா கார்டு


ஏழை, நடுத்தர, பணக்காரர் என அனைத்து மூத்த குடிமக்களும் அட்டை ஆயுஷ்மான் வயா வந்தனா பெறலாம்.  70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வருமான அளவை பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை பெற உதவும் சுகாதார காப்பீடு திட்டமான இதன பயனை பெற ஆயுஷ்மான் வயா வந்தனா கார்டு பெற வேண்டும். இந்த திட்டம் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (AB PM-JAY) ஒரு பகுதியாகும்.


மேலும் படிக்க | Budget 2025: ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை கிடைக்குமா? மூத்த குடிமக்களின் முக்கிய எதிர்பார்ப்பு


ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை


ஆன்லைன் விண்ணப்பம்: PM-JAY இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


E-KYC: உங்களிடம் ஏற்கனவே ஆயுஷ்மான் கார்டு இருந்தால், நீங்கள் e-KYC செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.


ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டையின் பயன்கள்


1. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும்.


2. சிகிச்சைக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை.


3. நல்ல மருத்துவமனைகளில் சிகிச்சையுடன் சிறந்த சுகாதார வசதிகளையும் பெற முடியும்.


ஆயுஷ்மான் வயா வந்தனா திட்டம் மூத்த குடிமக்களுக்கு பெரும் நிவாரணமாக உள்ளது. இது அவர்களுக்கு  மிகவும் தேவைப்படும் சிகிச்சை வசதிகளை வழங்குவதோடு, மருத்துவ சிகிச்சை செலவு குறித்த கவலையை போக்குகிறது. 


பிரதமர் தனது 'எக்ஸ்' பதிவில், "ஆயுஷ்மான் வய வந்தனா கார்டுக்கு எங்கள் மூத்த குடிமக்கள் காட்டும் ஆர்வம் மிகவும் திருப்தி அளிக்கிறது. அவர்களின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். மேலும் மேலும் மூத்த குடிமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"  என பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | EPFO குட் நியூஸ்: அரசின் பரிசு.... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ