குழந்தைகளுக்கான Blue Aadhar Card: விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Blue Aadhar Card: ப்ளூ ஆதார் கார்ட் பெரியோர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையில் (Aadhaar Card) இருந்து வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Blue Aadhar Card: இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆதார் அட்டை மிகவும் அத்தியாவசியமான ஒரு ஆவணமாக உள்ளது. ஐந்து வயதை விட குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக அளிக்கப்படும் ஆதார் அட்டை ப்ளூ ஆதார் கார்ட் ஆகும். ப்ளூ ஆதார் கார்டு, பால் ஆதார் கார்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் இருப்பதால், இதை ப்ளூ ஆதார் என அழைக்கிறோம்.
Blue Aadhar Card: இதில் உள்ள வித்தியாசம் என்ன?
ப்ளூ ஆதார் கார்ட் பெரியோர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையில் (Aadhaar Card) இருந்து வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து வயதை விட குறைவாக இருப்பவர்களுக்கு ப்ளூ ஆதார் கார்ட் வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கான ஆதார் அட்டையில் கைரேகைகள் அதாவது பயோமெட்ரிக் பெருக்கும். இது வெள்ளை நிறத்தில் இருக்கும். எனினும் ஐந்து வயதை விட குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஆதார் அட்டை பயோமெட்ரிக்கிற்கான தேவை இருக்காது. இது நீல நிறத்தில் இருக்கும்.
Blue Aadhar Card: இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply For Blue Aadhaar Card)
- ப்ளூ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, முதலில் உங்கள் குழந்தையுடன் ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் ஆதார் அட்டை, முகவரிச் சான்று மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
- ஆதார் பதிவு மையத்திலிருந்து ஆதார் பதிவுப் படிவத்தைப் பெற்று அதை நிரப்பவும்.
- உங்கள் ஆதார் எண் விவரங்களை வழங்கவும். அதன் பிறகு உங்கள் ஆதார் எண் குழந்தையின் UID உடன் இணைக்கப்படும்.
- அதன் பின்னர் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும். இதன் மூலன் உங்கள் குழந்தையின் ப்ளூ ஆதார் அட்டை வழங்கப்படும்.
- குழந்தைக்கான இந்த ஆதார் அட்டையை உருவாக்கும் போது, பயோமெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. ஆதார் பதிவு மைய அதிகாரி புகைப்படத்தை மட்டும் எடுப்பார்.
மேலும் படிக்க | இந்தியன் ரயில்வேயின் புதிய விதி.. இனி டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
- புகைப்படம் எடுத்த பிறகு ஆவண சரிபார்ப்பு செயல்முறை தொடங்கும்.
- ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி வரும்.
- அதன் பிறகு அடுத்த 60 நாட்களுக்குள் உங்கள் குழந்தையின் பெயரில் நீல நிற ஆதார் அட்டை (Blue AadhaarCard) வழங்கப்படும்.
- ப்ளூ ஆதார் அட்டையை பெற எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
Blue Aadhar Card: வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- யுஐடிஏஐ (UIDAI) -இன் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in -க்கு செல்லவும்.
- முகப்பு பக்கத்தில் Aadhaar Card Registration என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- அங்கு அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.
- இதன் பிறகு appointment என்பதை கிளிக் செய்து தேதியை புக் செய்து கொள்ளவும்.
- உங்களுக்கு புக் செய்யப்பட்ட தேதியில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் தாய், தந்தையில் யாராவது ஒருவரது ஆதார் எண் ஆகியவற்றை ஆதார் பதிவு மையத்தில் அளிக்க வேண்டும்.