Jobs In Google With Unbelievable Salary: கூகுள் நிறுவனத்தில் ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைக்காக விண்ணப்பித்தால் அதில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது
careers.google.com : உலகின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தில் வேலை என்றால், சம்பளமும் கணிசமாக இருக்கும் என்பதால் பலரும் அங்கு வேலை கிடைக்குமா என்று முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றனர். கூகுளில் வேலை கிடைக்க சுலபமான வழிகள் இவை...
படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களிடம் எங்கு வேலை பார்க்க விருப்பம் என்று கேட்டால் அவர்கள் பட்டியலிடும் நிறுவனங்களில் கூகுள் நிறுவனமும் ஒன்றாக இருக்கும். அருமையான சம்பளம் கொடுக்கும் தனியார் நிறுவனங்களில் கூகுள் பிரபலமானது. ஆனால் அங்கு வேலை கிடைப்பது ஒன்றும் சாதாரணமானது அல்ல
பல கடினமான செயல்முறைகளை கடந்தால் தான் கூகுளில் வேலை கிடைக்கும். கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக எடுக்கப்படும் இண்டர்வ்யூ என்ற நேர்காணல் மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. கூகுளில் எப்படி வேலை பெறுவது மற்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள பலருக்கும் ஆவலாக இருக்கும். கூகுள் இன்டர்வியூவில் என்ன கேட்கப்படுகிறது, எவ்வளவு சம்பளம் தரப்படுகிறது. அனைத்தையும் விரிவாக அறிந்து கொள்வோம்.
கூகுளில் பணிபுரிபவர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைக்காக விண்ணப்பிக்கின்றனர். அதில் 5 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே கூகுளில் வேலை கிடைக்கிறது.
கூகுளில் பயிற்சியாளர்களாக வேலைக்குக் சேர்ந்தவர்களுக்கும் சம்பளம் லட்சங்களில் இருக்கும். பல வசதிகளுடன் அருமையான சம்பளத்தைத் தரும் கூகுள், மதிய உணவு, இரவு உணவு, சிற்றுண்டி, ஸ்பா, ரிலாக்ஸ் ஹவுஸ் என பல வசதிகளைக் கொடுப்பதோடு, விடுமுறைகளையும் அதிகமாகவே கொடுக்கிறது
careers.google.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.உங்கள் திறமை, கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
கூகுளில் வேலைக்கான நேர்காணல் உலகின் மிகவும் கடினமான நேர்காணல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் பல வகையான லாஜிக்கல், சூழ்நிலை மற்றும் பிற வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதலில் தொலைபேசி நேர்காணலும் பின்னர் வீடியோ நேர்காணலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அடுத்த சுற்று அழைக்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவில் உள்ளது. உலகின் பல நாடுகளில் கூகுக்ள் கிளைகள் உள்ளன. இந்தியாவின் குருகிராம், மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் கூகுள் அலுவலங்கள் உள்ளன