நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் நல்ல நோட்டுகளா? கள்ள நோட்டுகளா? நம்மில் பலர் அவ்வப்போது கடைகளிலிருந்தும், ரூபாய் நோட்டுகள் பரிமாற்றப்படும் பல இடங்களிலிருந்தும் கள்ள நோட்டுகளைப் பெற்றிருக்கலாம். பலரால் தங்கள் பாக்கெட்டில் இருக்கும் 500 ரூபாய் நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்று சொல்ல முடியாது. ஏனெனில் கள்ள நோட்டுகளும் உண்மையான நோட்டுகளைப் போலவே இருக்கின்றன. உங்களுக்கு போலியான ரூ.500 நோட்டுகளுக்கும் உண்மையான ரூ.500 நோட்டுகளுக்கும் வித்தியாசம் தெரியாவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கி போலி நோட்டுகளை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. உங்களின் 500 ரூபாய் நோட்டுகள் உண்மையான நோட்டுகள்தானா என்பதை எப்படி கண்டறிவது என இந்த பதிவில் காணலாம். 


மகாத்மா காந்தி (புதிய) தொடரில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் கையொப்பம் உள்ளது. ஒரு "செங்கோட்டை" மையக்கருத்து நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை சித்தரிக்கிறது. இந்த ரூபாய் நோட்டின் அடிப்படை நிறம் கல் சாம்பல் (ஸ்டோன் க்ரே) ஆகும். ரூபாய் நோட்டின் முகப்பு மற்றும் பின்புறம் இரண்டிலும் உள்ள மற்ற வடிவமைப்புகள் மற்றும் வடிவியல் வடிவங்கள் ஒட்டுமொத்த வண்ணத் திட்டத்தை நிறைவு செய்கின்றன.


மேலும் படிக்க | மாயமாய் மறைந்த ரூ.2000 நோட்டுகள்!! இனி இவை செல்லாதா? 


உங்கள் 500 ரூபாய் நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படி கண்டறிவது? 


1) 500 என்ற மதிப்பைக் கொண்ட ஒரு தெளிவான பதிவு (see-through register).
2) 500 என்ற மதிப்பைக் கொண்ட மறைவு படம் (லேடண்ட் இமேஜ்).
3) தேவனாகிரி எழுத்தில் 500 என்ற எண்.
4) மையத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படம்
5) பாரத் (தேவ்நாகிரியில்) மற்றும் 'இந்தியா' ஆகியவை மைக்ரோ எழுத்துகளாக இருக்கும்.
6) 'பாரத்' (தேவ்நாக்ரியில்) மற்றும் 'ஆர்பிஐ' ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கலர் ஷிஃப்ட் விண்டோ பாதுகாப்பு த்ரெட். நோட்டை சாய்த்தால், பாதுகாப்பு த்ரெட் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறுவதைக் காணலாம்.
7) உத்தரவாத ஷரத்து, வாக்குறுதியின் உட்பிரிவுடன் ஆளுநரின் கையொப்பம் மற்றும் மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலதுபுறத்தில் ரிசர்வ் வங்கியின் சின்னம்.
8) மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் எலக்ட்ரோடைப்பின் வாட்டர்மார்க்ஸ் (500)
9) மேல் இடது மற்றும் கீழ் வலது பக்கங்களில் ஏறுவரிசை முன் எண்கள் கொண்ட எண் குழு
10) கீழ் வலதுபுறத்தில், நிறத்தை மாற்றும் மையில் (பச்சை முதல் நீலம் வரை) ரூபாய் சின்னத்துடன் (ரூ. 500) மதிப்புள்ள எண்.
11) அசோகர் தூண் சின்னம்
12) பார்வையற்றோருக்கான சில அம்சங்கள்-
மகாத்மா காந்தியின் உருவப்படம், அசோகர் தூண் சின்னம், வலதுபுறம் மைக்ரோடெக்ஸ் ரூ. 500 உடன் வட்ட அடையாளக் குறி, இடது மற்றும் வலது பக்கங்களில் ஐந்து கோண பிளீட் கோடுகள்.
13) ரூபாய் நோட்டின் இடதுபுறத்தில் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு.
14)  'ஸ்வச்ச பாரத்' லோகோவும் (சின்னமும்) அதன் சொற்றொடரும் (ஸ்லோகன்).
15) மத்தியில் மொழிகளின் பேனல்.
16) செங்கோட்டை - இந்திய கொடியுடன் காணப்படும் இந்திய பாரம்பரிய தளம்.
17) வலதுபுறத்தில்  தேவநாகிரியில் ரூபாய் மதிப்பு எண்.


மேலும் படிக்க | Jackpot! 1000 கொடுத்தால் 3.5 லட்சம்! பணக்காரர் ஆக அரிய வாய்ப்பு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ