IRCTC Ticket Bookings: முன்பதிவு ரயில் டிக்கெட்டின் வெய்டிங் லிஸ்ட் கன்பார்ம் ஆகுமா? சுலபமாக தெரிந்து கொள்ளுங்கள்
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருந்தால், கன்பார்ம் ஆகுமா? என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் 20 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இந்திய இரயில்வேயில் பயணிக்கின்றனர். இதன் காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் தொடர்பான பிரச்சனைகளை மக்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், பயணிகள் எளிதாகப் பயணம் செய்யும் வகையில், ரயில்வே மூலம் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஐஆர்சிடிசி ஆப் (IRCTC APP) அல்லது இணையதளத்தில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
ஆனால், இந்த வசதிகளுக்குப் பிறகும், கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டுக்காக ரயில்வே பயணிகள் போராட வேண்டியுள்ளது. நீண்ட தொலைவு செல்லும் அல்லது மிகவும் பிரபலமான ரயில்களில் கன்பார்ம் டிக்கெட்டுகள் விரைவாக கிடைக்காது. இதற்காக அந்த ரயில்களில் டிக்கெட்டுகளின் முன்பதிவு ஒரு சில மாதங்களுக்கு முன்பே செய்யப்பட வேண்டும். இருப்பினும், நீங்கள் தட்கலிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், இதற்கு நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியச் செய்தி - ஜூன் 30 கடைசி தேதி
மறுபுறம், உங்கள் டிக்கெட் உறுதிப்படுத்தப்படுமா? இல்லையா? என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், பயணத்திற்கான மற்றொரு விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். அதற்கு பிரத்யேகமான சில சூப்பரான வழிகள் உள்ளன. இந்த வழிமுறையைப் பின்பற்றி முன்கூட்டியே உங்களின் ரயில் டிக்கெட் கன்பார்ம் நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும்.
எப்படி தெரிந்து கொள்வது?
* வெயிட்டிங் லிஸ்ட் கன்பார்ம் ஆகுமா? இல்லையா? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், உங்களிடம் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் இருக்க வேண்டும்.
* அவை இருக்கும்பட்சத்தில் முதலில் irctc.co.in/nget/train என்ற வலைதளத்துக்கு செல்லவும்.
* அதில் வழக்கம்போல லாகின் (Login) செய்யுங்கள். ஒருவேளை புதியவராக இருந்தால் ஐஆர்சிடியில் புதிய கணக்கு ஒன்றை உருவாக்கவும்.
* இப்போது Train & PNR Enquiry விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு PNR எண்ணை உள்ளிட வேண்டும்.
* அதன்பின் 'Click here to get confirmation chance’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* இப்போது ஒரு புதிய பாப்அப் விண்டோ உங்கள் முன் திறக்கும், அது உங்கள் காத்திருப்பு டிக்கெட் உறுதிசெய்யப்பட வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பதைக் காட்டும்.
மேலும் படிக்க | New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR