How To Check Adulterated Milk: பால் நமது அத்தியாவசிய உணவுப் பொருள்களில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பசும்பால், எருமைப்பால் ஆகிய மாட்டுப்பால்கள் மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட பால்களும் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆவின், அமுல், நந்தினி உள்ளிட்ட கூட்டுறவு சார்ந்த பால்களும் மக்களிடையே அதிகம் வாங்கப்படுகின்றன. பால் மட்டுமின்றி பால் சார்ந்த பொருள்கள், பாலில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்டு விற்கப்படும் ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்றவையும் தயாரிக்கப்பட்டு மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கால்சியம் சத்தை பெற பால் பெரும் பங்கு வகிப்பதாக பலதரப்பட்ட மக்களால் நம்பப்படுகிறது. வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் கூட மக்கள் குறைந்தபட்சம் பாலையாவது பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்போடு இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகுந்த பொருளாக பால் உள்ளது. எனவே, மக்களும் ஆரோக்கியமான வகையில் கிடைக்கும் பால்களை வாங்கவே விரும்புகிறார்கள். பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைத்து தரப்படும் பால்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் நேரடியாக பால் விற்பனையாளர்களிடம் இருந்து, பால் பண்ணைகளிடம் இருந்தும் பால்களை வாங்கவும் விருப்பப்படுகிறார்கள். 


பாலில் கலப்படம்


இருப்பினும், இதுபோன்ற பால்களில் கலப்படம் நடைபெறவும் அதிக வாய்ப்பிருக்கிறது. கலப்படம் செய்யப்பட்ட பால்களை அருந்துவது நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். நீங்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் நல்லது. தரமான உணவு உங்களின் உரிமையாகும். அந்த வகையில், அதில் கலப்படம் செய்து தரத்தை குறைக்கும்பட்சத்தில் உங்களின் உரிமை பறிபோன உத்வேகத்தோடு அதுகுறித்து நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். 


மேலும் படிக்க | நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க.. ‘இந்த’ விஷயங்களை தினமும் செய்யுங்கள்!


கலப்படம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்றால் அதில் கலப்படம் நடைபெற்றிருக்கிறதா என்பதை நீங்கள் அறிந்துவைத்துக் கொள்வதும் அவசியமாகிறது. அந்த வகையில், வீட்டில் இருந்தபடியே நீங்கள் அருந்தும் பால் கலப்படமானதா இல்லையா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம். இந்த மூன்று வழிகளில் நீங்கள் கலப்படம் செய்யப்பட்ட பாலை கண்டறியலாம். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.  


இந்த மூன்று கலப்படங்கள்...


- பாலை குலுக்கியே ஒரு முக்கிய சோதனையை மேற்கொள்ளலாம். இதன்மூலம், பாலில் டிடர்ஜென்ட் கலந்திருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் கண்டறியலாம். ஒரு பாட்டிலில் பாலையும் தண்ணீரையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். அதனை நன்றாக குலுக்கவும். 30 விநாடிகள் அதனை நன்றாக குலுக்கிய பின்னர் அடர்த்தியான, நுரை மேலே உருவாகி அப்படியே இருந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்க வாய்ப்புள்ளது. கலப்படம் இல்லாத பாலில் டிடர்ஜென்ட் இருக்காது. 


- பாலில் தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை அறிய ஒரு சிறிய பால் மாதிரியை வெற்று மேற்பரப்பில் எடுத்து வைக்கவும். அது மெதுவாக, ஒரு வடிவத்துடன் சென்றால் பால் தூய்மையானதாகும். விரைவாகவும் மெல்லியதாகவும் நன்கு விரிந்தபடி பரவினால் பாலுடன் தண்ணீர் சேர்க்கப்பட்டிருக்கிறது என அர்த்தம். எனவே, பாலின் தூய்மையை சரிபார்க்க இது எளிதான வழிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. .


- செயற்கை பாலை கண்டறிய இந்த சோதனை உதவும். தீங்கு விளைவிக்கும் சோயா எண்ணெய்கள், யூரியா மற்றும் தீங்கு விளைவிக்கும் சேர்க்கைகள் ஆகியவற்றில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. அதில் கலப்படம் இருப்பதாக அதை சுவைத்து பார்க்கலாம். ருசித்து பார்த்தால் அதில் கசப்புத்தன்மை இருந்தால் கலப்படம் இருக்கலாம். மாற்றாக, உங்கள் விரல்களுக்கு இடையில் ஒரு பால் துளியை தேய்த்தால், பிசுபிசு என்ற உணர்வு ஏறப்பட்டாலும் கலப்படம் என அர்த்தம்.


மேலும் படிக்க | முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ