காதல் தோல்வியில் இருப்பவர்களுக்கு ஒரு தினத்தை கடந்து போவது ஒரு யுகத்தை கடப்பது போல இருக்கும். காதலில் முறிவும் பிரிவும் யாருடைய தவறும் அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள், காதலில் விழுந்தவர்களின் மன மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் காதல் முறிவு ஏற்படலாம். இந்த நிலையில் இருப்போர் மீண்டு வருவதற்கான முயற்சியை தேட வேண்டும். பிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர சில டிப்ஸ், இதோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. உங்களை முதன்மைப்படுத்துங்கள்:


பிரேக்-அப்பில் இருந்து கடந்து வருவது கஷ்டம்தான். ஆனால், அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டால் ஒரு சாதாரண மனிதராக நீங்கள் மேன்மை அடையலாம். உங்கள் இதயத்தை நொறுக்கிய அந்த நபர் குறித்த அதிகமாக யோசிப்பதை முதலில் நிறுத்துங்கள். அந்த காதல் முறிந்ததற்கு நீங்கள் மட்டுமே காரணம் கிடையாது, அப்படி நீங்கள் நினைத்துகொண்டிருந்தால் அந்த எண்ணத்தை தவிறுங்கள். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அழுகை வந்தால் மனம் விட்டு அழுங்கள், பேச வேண்டும் என்று தோன்றினால் யாரும் இல்லாத போது கண்ணாடி முன் நின்று பேசுங்கள். என்ன நடந்தாலும், உங்களை உங்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள். 


மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு காதல் மழை பொழியப்போகிறது..! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?


2. உங்களை பிசியாக வைத்துக்கொள்ளுங்கள்:


கை நிறைய வேலை இருக்கும் போதும் இதயம் நொறுங்கி கிடக்கும் போது நமக்கு எதுவுமே செய்ய தோனாது. அப்போதுதான் நாம் ஆக்டிவாக இருக்க வேண்டும். நீங்கள் தினசரி செய்யும் வேலைகளை எதற்காகவும் தள்ளிப்போடாதீர்கள். அலுவலகத்திற்கு செல்பவராக இருந்தால், உங்கள் முன்னாள் காதலரை அல்லது காதலியை பற்றி நினைப்பதை விட்டுவிட்டு உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வாரத்தில் விடுப்பு நாள் வரும் போது, உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். நீண்ட நாட்களாக  பார்க்க வேண்டும் என்ற் வாட்ச்-லிஸ்டில் வைத்திருக்கும் படம் அல்லது சீரீஸை பாருங்கள். 


3. கெட்ட பழக்கங்களுக்குள் சிக்கி விடாதீர்கள்!


காதல் முறிவு ஏற்பட்டவுடன் பலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாக வாய்ப்புகள் உள்ளது. “என் அஞ்சல மச்சான் அவ..” என குடித்துவிட்டு உளறுவது மனதிற்கு நல்லது என சிலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. போதை பழக்கம், குடி, புகைப்பிடித்தல் இவை எல்லாமே உங்கள் நூரையீரல், இதயம் ஆகியவற்றிற்கு கெடுதல். தீய பழக்கங்கள் குறித்து யோசிப்பதை விட்டுவிட்டு வேறு நல்ல செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். 


4. உடனே வேறு காதலில் விழ வேண்டாம்..


ஒருவருடன் நாம் காதலில் இருக்கும் போது அவரது முழு கவனம் நம் மீதே இருக்கும். பிரேக் அப் ஏற்பட்டவுடன் அந்த காதல், அதீத கவனம், அளவற்ற அன்பு என அனைத்துமே கிடைக்காமல் போய் விடும். இதனால் இந்த அன்பை வேறு இடத்தில் நம் மனம் தேட ஆரம்பிக்கும். கொஞ்சம் நம்மிடம் அன்பு செலுத்துபவரை கூட காதலில் இழுத்துப்போட நினைப்போம். அப்படி செய்து விடாதீர்கள். உங்கள் மனம் இப்போது நொறுங்கியுள்ளது. இதை வேறு ஒரு நபரால் கண்டிப்பாக சரி செய்ய முடியாது. உங்கள் நொறுங்கிய இதயத்தை ஒட்டவைக்க உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுடைய புண்பட்ட மனதை ஆறுதல் படுத்த உதவும். 


மேலும் படிக்க | இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்கள் க்ரஷ்ஷிற்கு உங்களை பிடிக்கவில்லை என்று அர்த்தம்…!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ