‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு காதல் மழை பொழியப்போகிறது..! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Love Horoscope: பல ராசிகள் இருந்தாலும் அதில் சில ராசிகளுக்கு மட்டுமே காதல் வாழ்க்கை நன்றாக அமையும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா? 

Last Updated : Jun 26, 2023, 06:51 AM IST
  • 12 ராசிகள் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு மட்டுமே காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
  • சிலருக்கு மட்டுமே அந்த அமைப்பு உண்டு.
  • யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்.
‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு காதல் மழை பொழியப்போகிறது..! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்? title=

மொத்தம் 12 ராசிகள் இருந்தாலும் அதில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே காதல் வாழ்க்கை நன்றாக அமைகின்றன. அதிலும் சிலருக்கு பெரிய சைஸில் எங்கேயோ மச்சம் இருப்பது போல காதலில் மட்டும் அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? 

காதல் என்பது வெறும் உணர்ச்சியல்ல; அது ஒரு வாழ்நாள் அனுபவம். பிணைப்பு, சமரசம் மற்றும் அன்பு ஆகியவற்றின் இந்த அனுபவத்தைப் போற்றுவதற்கு இரண்டு பேர் காதலில் இணைய வேண்டும். இருப்பினும், காதலர்கள் மத்தியில் இருப்பது வெறும் காதல் மட்டும்தானா என்ற கேள்வியும் எழுகிறது. சமயங்களில் தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் அன்பை பரிமாறிக்கொள்வதிலும் புரிந்து கொள்வதிலும் சிரமப்படுகிறார்கள். ஆனால், ஒரு சில ராசிக்காரர்களுக்கு கை மேல் ஜாக்பாட் அடித்தது போல, அவரை புரிந்து கொள்ளும் பார்ட்னர் கிடைத்து காதல் வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து கொண்டிருப்பர். அப்படி காதல் வாழ்க்கையில் வெற்றி அடையை இருக்கும் அல்லது வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? 

மேலும் படிக்க | திருமண வாழ்வு சலிப்பு தட்டிவிட்டிவிட்டதா... சூடேத்த சூப்பர் 5 டிப்ஸ்!

கடகம்: 

கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே தங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துபவர்களாகவும் தெளிவான சிந்தனையுடனும் இருப்பர். இதனால் இவர்களுடன் பழகுபவர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போகும். இவர்கள், தங்கள் அன்புக்குரியவருக்கென க்யூட்டான சில விஷயங்களையும் செய்வர். மற்றவரை புரிந்து கொள்ளும் திறனும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகம் உள்ளதால் இவருடன் நேரம் செலவிட பலரும் விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் தங்கள் பார்ட்னர் மீதும் அதிக அன்பு வைத்திருப்பர். இதனால் இவர்கள் காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்கள் பார்த்தவுடன் ‘ரக்கட்-கேர்ள், ரக்கட்-பாய்’ போல இல்லாமல் மிகவும் மென்மையான குணம் படைத்தவராக இருப்பர். பிறரை கடிந்து பேசாத திறன் உடையவர்கள், இந்த ராசிக்காரர்கள். இவர்கள், எந்த உறவையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒருவரை மனதார காதலித்தால் அவர்களுக்காக என்ன வேண்டுமானால் செய்யும் குணமும் இவர்களிடத்தில் உண்டு. இதனால், இவர்களது காதல் வாழ்க்கையில் வெற்றி மீது வெற்றி வந்து சேருமாம். 

மீனம்:

மீன ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளுக்கும் தனது பார்ட்னரின் உறவுகளுக்கும் மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பர். காதல் என வந்துவிட்டால் அதற்காக எதையும் செய்ய துணிந்தவர்கல், மீன ராசிக்காரர்கள். இவர்கள், தங்களது உள்ளுணர்வின் படி நடப்பதால் அதிகமாக சண்டை போடுவதை தவிர்ப்பர். ஒருவரை காதலிப்பது என வந்துவிட்டால், தன்னையும் மீறி தன்னால் முடிந்த அன்பை அவர்கள் மீது பொழிவதில் கெட்டிக்காரர்கள் இவர்கள். இதனால், இவர்களின் காதல் வாழ்க்கையில் தடை ஏற்படாது என கூறப்படுகிறது. 

கன்னி: 

கன்னி ராசி உள்ளவர்கள் காதல் கலையில் வல்லவர்கள் என்பது யாருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை. இவர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால், அவர்களின் அன்பை பெற எந்த எல்லைக்கும் செல்வார்களாம். தனது உணர்வுகளை மட்டுமன்றி தனது பார்ட்னரின் உணர்வுகளையும் உள்வாங்கி அதற்கு மதிப்பு கொடுப்பவர்கள், கன்னி ராசிக்காரர்கள். 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று இறங்கி விட்டால் அதை திறம்பட செய்யும் மனவலிமை மிக்கவர்கள். இது அவர்கள் காதல் வாழ்க்கைக்கும் பொருந்து.  தங்கள் பார்ட்னருக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுப்பது, அவர்களுக்கு சமமான மரியாதை வழங்குவது என பல நல்ல குணாதிசயங்கள் இந்த ராசிக்காரர்களிடம் இருக்கும். இவர்களுடைய காதலர்/காதலில் செய்யும் ஒரு விஷயம் இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை எந்த விதத்தில் சொல்ல வேண்டுமோ அப்படி அவர்களிடம் சொல்லி சண்டை வராமல் தடுப்பர். இதனால் இவர்கள் காதல் வாழ்க்கையில் கரடு முரடான பாதை எனபதே இருக்காதாம். 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் ‘செய் அல்லது செத்துமடி’என்ற வகையான காதல் செய்வார்களாம். இவர்களுக்கு உண்மையான காதல் மீது அதீத நம்பிக்கை உண்டு. அதனால், சும்மா வந்து பேசுபவர்கள் மீதெல்லாம் இவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். காதல் மொழி என்று வந்துவிட்டால் அதை வெளிப்படுத்துவதிலும் கெட்டிக்காரர்கள் இவர்கள். உணர்ச்சிகளை வார்த்தைகளால் பரிமாறிக்கொள்ளவும் இந்த ராசிக்காரர்கள் தயராக இருப்பார்கள். தனது வருங்கால காதலர்/காதலி நமக்கு மட்டும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். இதனால், இவர்கள் காதல் வாழ்க்கை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வரும்.  

மேலும் படிக்க | குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? புதிய பெற்றோர்களுக்கான சில சிம்பிள் வழிமுறைகள் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News