ஆசை ஆசையாய் விரும்பிய இருவரும் பிரேக் அப் என்ற முடிவை எடுக்கும் சூழல் மிகவும் கொடியது. அதிலும் பிரேக்அப்புக்கு பிறகு அவர்களை பொதுவெளியில் மீண்டும் சந்திப்பது கொடுமையின் உச்சம். இந்த சூழல் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், கடந்து செல்லவோ, ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளோ உங்களுக்கு இயல்பாக அமைந்துவிடும். சில நேரங்களில் உங்கள் முன்னாள் காதலியை மீண்டும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டு, அவர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கலாம்.
அப்போது, கடினமான காலங்களை மறந்து மீண்டும் இயல்பாக பழகலாமா? என்ற எண்ணம், குழப்பம் உங்களிடையே எழ வாய்ப்பு இருக்கிறது. இதில் பாசிட்டிவான அணுகுமுறையும் இருக்கிறது. நெகட்டிவான அணுகுமுறையும் இருக்கிறது. பாசிடிவ் என்றால், பழையதை மறந்து மீண்டும் உங்கள் உறவை புதுப்பித்துக் கொண்டு, கடந்த கால தவறுகளை நினைவு கூறாமல் அதில் இருந்து கற்றுக் கொண்ட அனுபவத்தில் நல்ல முறையில் உங்கள் காதலை எடுத்துச் செல்லலாம். அதேநேரத்தில், நெகடிவ் பக்கமும் இருக்கிறது. இதனையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ரயில் ரிசர்வேஷன் சார்ட் ரெடி ஆனபிறகும் பணம் ரீஃபண்ட் கிடைக்குமா?
மன கஷ்டம்
அவருடன் நெருங்கிப் பழகிய நீங்கள் மிகப்பெரிய மனக் கஷ்டங்களையும், தவிர்க்க முடியாத சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். அதன் காரணமாகவே நீங்கள் அவரை விட்டு பிரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியான சம்பவம் மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கருத்து வேறுபாடு ஏற்படும்போதெல்லாம், பழைய விஷயங்களை நினைவுகூற வாய்ப்பிருக்கிறது. இப்போது தான் அந்த கடினமான காலங்களில் இருந்து மீண்டும் வந்திருக்கிறீர்கள் என்பதால், யோசிப்பது நல்லது.
கருத்து வேறுபாடு
ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த உங்களுக்குள் மீண்டும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சின்ன சின்ன விஷயங்களைகூட குத்தி காட்டுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் நீங்கள் மீண்டும் மனக்கஷ்டத்துக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. இதனையெல்லாம் உங்களால் சமாளிக்க முடியுமா? என எல்லா சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி
பழைய சந்தோஷத்தை நாடி உங்கள் பழைய காதலியுடன் மீண்டும் பழகினால், இருக்கின்ற சந்தோஷத்தையும் இழந்துவிடுவீர்கள். கடந்த காலம் ஒருபோதும் திரும்பாது. பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் இயற்கையின் நியதி. எனவே, முன்னாள் காதலியை மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் சாமர்த்தியமாக நழுவிச் செல்வது தான் உங்களுக்கும் நல்லது, அவரும் நல்லது.
மேலும் படிக்க | நல்லவராக இருந்தும் சிங்கிளாக இருக்கிறீர்களா? அதற்கான முக்கிய காரணம் இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ