பொய் பேசுகிறார்கள் என்பதை எப்படி ஈஸியாக கண்டுபிடிப்பது?
How to Easily Detect a Liar: ஒருவர் பொய் பேசுகிறார் என்பதை எதை வைத்து கண்டுபிடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Detect a Liar | இன்றைய காலகட்டத்தில், பொய் பேசுபவர்கள் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது, அவர்கள் தங்கள் வசதிக்காக பொய்களை பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். உண்மையில், பொய் பேசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். பொய் பேசி மற்றவரை நம்ப வைப்பது ஒரு கலை என்று கூட சொல்லலாம். எனவே, பொய் சொல்பவரை முட்டாள் அல்லது அப்பாவியாகக் ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். அத்தகைய நபருடன் இருக்கும்போது முற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், இவர்கள் எப்போது தங்கள் சொந்த நலனுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
உண்மையைச் சொல்வதை விட பொய்க்கு அதிக புத்திசாலித்தனம் தேவை. அந்த கலை எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சிலருக்கு மட்டுமே அந்த குணாதிசயம் இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு திருடனும் திருடும்போது ஏதாவது ஒரு தவறை செய்துவிடுவான். அதை சரியாக நோட் செய்தால் போதும், உண்மை மற்றும் பொய்யை எடை போட்டு கண்டுபிடித்துவிடலாம். அந்தவகையில் பொய்யை அடையாளம் காண சில தந்திரங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பொய் எப்படி சொல்வார்கள்?
- பொய் சொல்பவர்கள் தங்கள் கதைகளை வரிசையாகச் சொல்கிறார்கள். கதையின் ஆரம்பமும் முடிவும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. அதேசமயம் உண்மையைப் பேசுபவர்கள் நேரடியாக பேசுவார்கள். பொய் பேசுபவர்கள் பொய்யை சொல்லிவிட்டு இரண்டு, மூன்று புதிய விஷயங்களைச் தங்கள் வசதிக்கு ஏற்ப இடையில் சேர்த்துக் கொள்வார்கள்.
- பொய் சொல்பவர்கள் நீங்கள் அவர்களை நம்புகிறீர்களா இல்லையா என்பதை அவர்கள் அறிய விரும்புவார்கள். முழுமையான திட்டமிடலுடன் பொய் சொல்பவர்களால் இது பெரும்பாலும் செய்யப்படுகிறது.
- பொய் சொல்லும்போது, மக்கள் ஒப்பீட்டளவில் சிறந்த மற்றும் அதிநவீன மொழி நடையை பயன்படுத்துவார்கள். நீங்கள் அவர்களிடமிருந்து இதுவரை கேள்விப்படாத வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவார்கள்.
- உண்மையைப் பேசுபவர்கள் இயல்பாகப் பேசுவார்கள். அதே நிகழ்வை விவரிக்கும் போது அவர்கள் புதிய உண்மைகளையும் சேர்க்கலாம். அதேசமயம் பொய்யர்கள் தாங்கள் முன்பு கூறியதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்
- பொய் பேசுபவர்கள் முக்கியமான உண்மைகளை மறைக்கிறார்கள் அல்லது மறந்துவிட்டதாக நடிப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மாட்டார். அவர்கள் அடிக்கடி உங்கள் கேள்விகளுக்கு எதிர்கேள்வியை பதிலாக வைப்பார்கள். பொய் சொல்பவர்கள் எளிதாக ஒரு வார்த்தையில் பதில் சொல்லமாட்டார்கள்.
மேலும் படிக்க | பழைய துணியை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்..எந்த நேரத்தில் தானம் செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ