வீட்டில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் மக்கள் பயன்படுத்தி பின்னர் அதனை யாருக்காவது தானம் கொடுத்துவிடுவது வழக்கம். அந்தவகையில் பழைய துணியைச் சரியான முறையிலும் மற்றும் நேரத்திலும் தானம் செய்தால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
வீட்டில் பொதுவாக நீங்கள் பயன்படுத்தும் துணிகள் ஏற்கனவே உபயோகம் செய்தது. அந்தவகையில் உங்கள் துணிகளில் தங்கியிருக்கும் கிருமிகள் அடுத்தவருக்கு அந்த கிருமிகள் ஒட்டலாம் அல்லது ஒட்டாமலும் இருக்கலாம். இதனை நீங்கள் இந்தமுறையில் மற்றொருவருக்கு நேர்த்தியாகக் கொடுப்பது என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
வீட்டில் விளக்கக்கேற்றும் நேரத்தில் முக்கிய விஷயங்கள் கட்டாயம் கடைப்பிடித்தால் உங்கள் குடும்பத்திற்கு நல்லது. அதுபோன்று வீட்டில் விளக்கேற்றிய பின் பழைய துணிகள் மற்றொருவருக்குக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
வீட்டில் பழைய துணிகள் அடுத்தவருக்குக் கொடுக்கும்போது கவனமாகக் கிழிந்திருக்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனித்தபின் கொடுக்க வேண்டும்.
வீட்டில் அதிகமான பழைய துணிகள் சேர்த்து வைப்பதைத் தவிர்த்துவிடவும். அதே சமயத்தில் பழைய துணிகள் கிழிந்திருந்தால் அதனைத் தையல் செய்து பயன்படுத்தவும் அல்லது பிடிக்கவில்லை என்றால் அப்புறப்படுத்துங்கள்.
பொதுவாக அன்னை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் உள்ளிட்ட ஆசிரமத்தில் பழைய துணிகளில் நல்ல துணிகளைத் தானமாக அவர்களுக்கு வழங்கலாம்.
தானம் செய்வது உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும். ஒருவருக்கு தானம் செய்வதை நல்ல மனதோடு செய்வதால் கடவுள் அவர்களுக்கான பலன்கள் வாழ்க்கையில் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.
ஒருவர் பயன்படுத்தும் துணி அவர்களுக்கு மட்டும்தான் தெரியும் உடம்பில் என்ன நோய் இருக்கிறது. எப்படி உடல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிந்தபின் உபயோகம் செய்த துணியை யோசனை செய்து கொடுக்க வேண்டும்.
ஒருவர் உடம்பில் இருக்கும் கிருமிகள் அல்லது கெட்ட பாக்டீரியாக்கள் அடுத்தவரைப் புண்படுத்தாமல் இருப்பதை யோசிக்க வேண்டும். ஏதேனும் உடலில் வியாதி இருந்தால் பழைய துணியை மற்றொருவருக்குக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
பழைய துணி கசங்கி இருந்தால் அல்லது கிழிந்திருந்தால் மற்றொருவாக்கு கொடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். உங்கள் வீட்டில் கிழிந்த பழைய துணிகள் மற்றும் கிழிந்த உடைகள் அனைத்தையும் நெருப்போட்டு கொளுத்திவிடுங்கள்.
இங்குக் கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் சுயமாக எழுதவில்லை. அனைத்தும் தகவல் அடிப்படையில் எழுதப்பட்டது என்பது உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.