“காலம் பொன் பாேன்றது கடமை கண் பாேன்றது” எனும் வாக்கியத்தை பிறர் கூற நாம் கேட்டிருப்போம். நாமே கூட அதை பலருக்கு கூறியிருப்போம். ஆனால், நமக்கு முக்கியமான வேலையை செய்ய வேண்டும் என்று வரும் போதுதான், இல்லாத அனைத்து காரணங்களையும் கூறி, அந்த வேலையை அப்படியே தள்ளி போடுவோம். இது நல்லதற்கல்ல என்பது தெரிந்தும் இதை செய்வோம். அப்படி, நாம் வேலையை நேரம் வீணாக்காமல், தள்ளிப்பாேடாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்படி முடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2 நிமிட விதிமுறை:


நாம், மிகவும் கடினமாக இருக்கும் என நினைத்து தள்ளிப்போடும் காரியங்கள் பெரும்பாலான சமயங்களில் செய்வதற்கு மிகவும் சுலபமானவையாக தான் இருக்கும். உங்களுக்கு, அந்த வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும் திறமையும் இருக்கும். ஆனால், ஏதேனும் காரணங்கள் சொல்லி நீங்கள்தான் அதை தள்ளி போட்டுக்கொண்டு இருப்பீர்கள். அப்போதெல்லாம் இந்த 2 நிமிட விதிமுறையை பின்பற்றுங்கள். 


நீங்கள் செய்ய நினைக்கும் அந்த வேலை, 2 நிமிடங்களுக்குள் முடிக்கப்படுவதாக இருந்தால் அதை தாமதிக்காமல் உடனடியாக செய்துவிட வேண்டும். அப்படி இரண்டு நிமிடங்களுக்கு மேல் அந்த வேலை எடுக்கும் என தெரிந்தால், முதலில் அந்த வேலையை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து முதல் 2 நிமிடங்களில் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அந்த வேலையை செய்து முடித்துவிட வேண்டும். இப்படியே பழகினால் நீங்கள் எந்த வேலையையும் தள்ளிப்போடாமல் செய்து விடுவீர்கள். 


காலக்கெடு:


நாம் வேலை பார்க்கும் இடத்தில் அல்லது படிக்கும் இடத்தில், ஒரு வேலையை முடிக்க காலக்கெடு கொடுப்பர்.  நாம், என்னதான் அதை ஆரம்பத்தில் முடிக்காமல் இருந்தாலும் குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் அதை முடித்து கொடுத்துவிடுவோம். அதே போல, நாம் செய்ய இருக்கும் வேலைக்கும் சரியான காலக்கெடுவை நாம் கொடுத்துக்கொள்ள வேண்டும். 


நாம் செய்ய நினைக்கும் வேலையை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து “இந்த நாளுக்குள் இதை முடிக்க வேண்டும்” என்று காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு அந்த வேலை குறித்த பொறுப்புணர்வு ஏற்படும். 


மேலும் படிக்க | வேலை பார்க்கவே கடுப்பா இருக்கா... இந்த 5 பழக்கங்களை வச்சுக்கோங்க - பிரச்னை ஓவர்!


வேலை-ஓய்வு-வேலை:


இந்த முறையை, ஆங்கிலத்தில் ‘Pomodoro Technique’ என்று  கூறுகின்றனர். 25 நிமிடங்கள் முதலில் ஒரு வேலையை செய்ய வேண்டும், பின்பு 5 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும், பின்பு மீண்டும் 25 நிமிடங்களுக்கு அந்த வேலையை செய்ய வேண்டும். 


இப்படி ஓய்வு எடுத்து, வேலை செய்து மீண்டும் ஓய்வு எடுப்பதால் நமது மூளை சரியாக இயங்குமாம். இதனால், நினைவாற்றல் அதிகரித்து நினைக்கும் வேலையை முடிப்பதற்கான எனர்ஜியும் கிடைக்கிறது. 


கவனச்சிதறல்களை அகற்றவும்:


உங்கள் கவனத்தை திசை திருப்புவது எது என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அது உங்கள் கைகளில் இருக்கும் செல் போனாக இருக்கலாம், போனில் இருக்கும் சமூக வலைதளமாக இருக்கலாம், நீங்கள் இருக்கும் இடமாக இருக்கலாம். எதுவாக இருப்பினும், முதலில் அதை கண்டுபிடித்து, நீக்கி, உங்கள் கவனம் சிதறாமல் தடுக்க வேண்டும். 


உங்களுக்கு நீங்களே கொடுக்கும் அன்பளிப்பு:


நீங்கள் முழுமையாக ஒரு வேலையை முடித்த பிறகு, அல்லது ஒவ்வொரு வேலையையும் முடித்துக்கொண்டே வரும் போது, உங்களுக்கு நீங்களே ஒரு அன்பளிப்பை கொடுத்துக்கொள்ளுங்கள். அது பெரிய பரிசாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு பிடித்த புத்தகம் வாங்குவதாக இருக்கலாம், அல்லது உங்களுக்கு பிடித்ததை செய்து சாப்பிடுவதாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் அது நீங்கள் உங்களுக்கு கொடுத்துக்கொள்ளும் அன்பளிப்பாக அது இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | அலுவலக அரசியலை கையாள்வது எப்படி? ஈசியான 5 வழிகள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ