போர் அடிக்காமல் வேலை செய்வது எப்படி? இந்த டிப்ஸை படிங்க விறுவிறுன்னு வேலை முடியும்!

Career Growth Tips In Tamil : பலருக்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது போர் அடிப்பது சகஜம். அப்படி இருக்கும் சமயங்களில் போர் அடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? டிப்ஸ் இதோ!

Career Growth Tips In Tamil : அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வது, அனைத்து சமயங்களிலும் உற்சாகமானதாக இருக்காது. இந்த உற்சாகமற்ற மனநிலை, ஒரு கட்டத்தில் நம்மை அலுவலக வேலைகளில் ஈடுபட செய்யாமல் செய்து விடும். இதனால் வேலை நேரத்தில் சோர்வு, தூக்கம், பின்னர் உயர் அதிகாரியிடம் திட்டு என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை தவிர்க்க, தொழில் ரீதியாக தங்களை தாங்களே உயர்த்திக்கொள்ள, அலுவலகத்தில் அவரவருக்குரிய வேலையை சரியாக செய்ய வேண்டியது அவசியம். அப்படி போர் அடிக்கும் சமயங்களில் என்ன செய்ய வேண்டும்? டிப்ஸ் இதோ!

1 /7

ஒருவர், அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது சலிப்பாக உணர்வதற்கும் அவர்களுக்கு போர் அடிப்பதற்கும் எக்கச்சக்க காரணங்கள் இருக்கலாம். அதில் சில,  >நீங்கள் உங்கள் வேலை குறித்து அலட்சியமாக உணரலாம்... >உங்கள் கற்றல் திறன் குறைந்து கொண்டே போகலாம் >உங்கள் வேலையில் நீங்கள் நேரத்தை வீணடிப்பது போல தோன்றலாம் >அலுவலக நேரத்தில் எப்போதும் சோர்வாக தோன்றலாம் >நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது கவனச்சிதறல் ஏற்படலாம் >வேலையை தவிர பிற வேலைகளில் முழு ஈடுபாடு செலுத்துவதால் அலுவலக வேலைகள் போர் அடிக்கலாம். இதை எப்படி மாற்றுவது? போர் அடிக்காமல் வேலை செய்வது எப்படி? ஈசி டிப்ஸ், இதோ!

2 /7

உங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து கொள்வது: இந்த இலக்குகள் 1 வருடத்திற்கானதாகவும் இருக்கலாம் அல்லது 5-10 வருடத்திற்கானதாகவும் இருக்கலாம். உங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை உங்கள் வேலையில் காண்பிக்க ஆரம்பித்தாலே சரியாக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். 

3 /7

திறன்களை கற்றுக்கொள்வது: புதிதாக ஏதேனும் திறன்களை கற்றுக்கொண்டாலே, நாம் ஒரு தனிப்பட்ட நபராக நன்றாக வளருவோம் என்று கூறுவர். இது, ஒரு வகையில் பலருக்கும் உண்மை என்றே தோன்றுகிறது. உங்கள் வேலையில், உங்களை விட உயர்பதவியில் இருப்பவர்கள் அல்லது வேறு துறையில் இருப்பவர்களுக்கு என்ன திறன் தெரியும்/தெரியாது என கேட்டுக்கொண்டு அதை நீங்கள் கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம்.

4 /7

தனிப்பட்ட வளர்ச்சி: நீங்கள் சரியாக வேலை செய்வதால் உங்கள் நிறுவனத்திற்கு என்ன வளர்ச்சி என யோசிப்பதை விட, உங்களுக்கான வளர்ச்சிகள் என்னென்ன இருக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். இது, உங்களை வேலை செய்ய தூண்டும். 

5 /7

ஆசையை கண்டுபிடியுங்கள்: நீங்கள் தற்போது போர் அடிக்கிறது என கூறும் வேலையில், நீங்கள் ஆரம்பத்தில் சேர்ந்த போது மிகுந்த ஆசை மற்றும் கணவுகளுடன் சேர்ந்திருப்பீர்கள். அந்த ஆசையும் கணவும் என்ன, அதை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் பாருங்கள். இது, உங்களது வேலையை போர் அடிக்க செய்யாது.

6 /7

உயர் அதிகாரியிடம் பேசுங்கள்: பல சமயங்களில் ஒரே மாதிரியான வேலைகள் செய்வதால் பலர் வேலையில் உற்சாகமின்றி காணப்படுவர். அதனால், உங்கள் உயர் அதிகாரி புரிந்து கொள்ளும் மன நிலையுடன் இருப்பவராக இருந்தால் அவரிடம் இது குறித்து மனம் விட்டு பேசுங்கள். அவர்கள், உங்களுக்கு எந்த மாதிரியான வேலைகள் பிடிக்கும் என கேட்டு, அதற்கு ஏற்ற துறையில் உங்களை சேர்ப்பர்.

7 /7

பிரேக் எடுப்பது: எந்த நேரமும் எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தால் கண்டிப்பாக அது ஒரு கட்டத்தில் சலித்து விடும். ஒரு நாளில், 8 மணி நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டாம். அவ்வப்போது உங்களுக்கு தேவையான ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்வதும் வேலையை சரியாக செய்து முடிக்க உதவும். அதற்கென்று, அடிக்கடி வேலையில் இருந்து எழுந்து பிரேக் செல்லக்கூடாது.