Lifetsyle Tips In Tamil: பலருக்கும் குடும்ப வாழ்க்கை, பணி வாழ்க்கை ஆகிய இரண்டையும் சரியாக நிர்வகிப்பதில் சிக்கல் இருக்கும். அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவதால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுவதும், குடும்பத்தை பற்றிய அதிக சிந்தனையால் அலுவலகத்திலும் பணியிடத்திலும் சரியாக வேலை நடக்காததும் பலருக்கும் பிரச்னையாக இருக்கும். அதிலும் முக்கியமாக பணியிடத்தில் சரியாக பணியாற்றாவிட்டால் அது பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் இன்னும் பிரச்னைகளை கொண்டுவரும் வாய்ப்பும் உள்ளது.
எனவே, அலுவலகத்திலோ, பணியிடத்திலோ விழிப்புடனும் முழு கவனத்துடனும் பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது. அது 9-5 அலுவலக பணியாகவும் இருக்கலாம், முழுக்க முழுக்க படைப்பாற்றால் சார்ந்த பணியாகவும் இருக்கலாம், அதில் நீங்கள் ஈடுபாட்டுடன் அதிக கவனத்துடன் செயலாற்றினால் மட்டுமே அதில் சிறந்த விளங்க முடியும். அந்த வகையில், பணியில் முழு கவனத்துடன் செயலாற்றுவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 5 பழக்கங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
5 பழக்கங்கள்
வேலையை திட்டமிடுங்கள்: அன்றைய நாளில் நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் என்ன, என்னென்ன வேலைகளை எப்போது முடிக்க வேண்டும், எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எது கடினமான வேலை ஆகியவற்றை முன்கூட்டிய திட்டமிடுவதன் மூலம் பணியில் உங்களின் நேரமும் மிச்சமாகும், ஒரு இலக்கை நோக்கி நகர்வதற்கும் இது உதவும். இதனால் உங்களின் கவனம் சிதறாது, முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற முடியும்.
மேலும் படிக்க | உங்களை நீங்களே காதலிப்பது எப்படி? இந்த 8 தாரக மந்திரங்களை ஃபாலோ செய்யுங்கள்!
பணியிடமும் முக்கியம்: நிம்மதியாக, அமைதியாக பணியாற்றும் வகையில் பணியிடத்தை அமைத்துக்கொள்ளுங்கள். நிதானமும் அமைதியும் பணியிடத்தில் இருக்கும்போது உங்களால் முழு கவனத்துடன் பணியாற்ற முடியும். மேலும், எவ்வளவு கடினமான வேலையும் முழு கவனத்துடன் செய்வதன் மூலம் எளிமையாகிவிடும்.
சிறு சிறு இடைவெளிகள்: 8-9 மணிநேரம் வேலை என்றால் நீங்கள் அதில் அவ்வப்போது சிறு சிறு இடைவெளிகளை எடுத்துக்கொள்ளலாம். அரைமணி நேரம் உணவு இடைவெளி என்றால் இடை இடையே 5-10 நிமிடங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இந்த ஓய்வு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் முழு கவனமும் வேலையில் இருக்க வேண்டும். இதனால், நேரமும் மிச்சமாகும் பணியும் நிறைவாக அமையும்.
மொபைல் பயன்பாடு: அலுவலகத்தில் சமூக வலைதளங்களை அதிக நேரம் பயன்படுத்துவதும் உங்களின் கவனத்தை சிதறடிக்கும். வேலை சார்ந்த மொபைல் பயன்பாடு வேறு, ஆனால் சமூக வலைதளங்ளுக்கு அடிமையாவதன் மூலம் அலுவலகத்திலும் அதையே தொடர்ந்தால் சீரான முறையில் வேலை நடைபெறாது. எனவே, தேவையற்ற மொபைல் பயன்பாட்டை தவிருங்கள்.
தூக்கம் அவசியம்: பகல் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக பணியாற்றவும், அயர்ச்சி இன்றி இருக்கவும் நல்ல தூக்கம் தேவை. வயது வந்தோர் குறைந்தபட்சம் 6-7 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும். அதுவே உங்களின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். இதனால், பணியும் சிறக்கும்.
(பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய அடைப்படை விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ