உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றை நினைத்து பலரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கலாம். ஆனால், அதை விட ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு செல் ஃபோனுக்கு அடிமையான குழந்தைகளை நினைத்து வருந்தாத பெற்றோர் இருக்கவே முடியாது. பற்றாக்குறைக்கு குழந்தைகளை கவரும் விதமாக ஏராளமான கேமிங் ஆப்புகளும் அறிமுகமாகின. குழந்தைகளை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கும் இந்த செல் ஃபோன் தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்க பெற்றோர் படாதபாடு படுகின்றனர். ஆனால் இதன் விபரீதம் புரியாமல் பல பெற்றோர் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் மற்றும் ஓரிரு வயதான குழந்தைகளிடம் செல் ஃபோன்களை கொடுத்து அழுகையை நிறுத்துவது. உணவு உட்கொள்ள வைப்பது உள்ளிட்ட தவறான முறைகளை கையாளுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தவறாக பயன்படுத்தப்படும் எமோஜிக்கள்: கவலைக்கு பதிலாக வருத்தம் தெரிவிக்கலாமா


 


இதனால் குழந்தைகளின் கண் நரம்புகளில் பாதிப்பு, மூளை நரம்பில் சிதைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர். குழந்தைகள் தரும் சிறு சிறு தொந்தரவுகளை, குறும்புகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் செல் ஃபோன்களுக்கு பெற்ற குழந்தைகளை அடிமைகளாக்குவது கனிசமான விஷத்தை பருக செய்வதற்கு சமம் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே செல் ஃபோன்களுக்கு அடிமையான குழந்தைகளை எவ்வாறு அதில் இருந்து மீட்கலாம் என்பதை பார்க்கலாம். குழந்தைகள் நேரத்தை போக்க வழிதெரியாமல் பெற்றோரிடம் போர் அடிக்கிறது என்று சொல்லும்போது.., பெற்றோர் அதை புரிந்துகொண்டு அவர்களுடன் சென்று விளையாட வைக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தில் அந்த நேரம் அவர்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும். 



செல் ஃபோன் பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை நிர்நயம் செய்து அந்த நேரத்தில் மட்டும் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் செல் ஃபோனை அவர்கள் கையில் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் செல் ஃபோனில் எதை பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல் குழந்தைகள் கையில் செல் ஃபோன்களை கொடுத்து தனிமையில் விடுவதை முற்றிலும் தவிற்க வேண்டும். அது மட்டும் இன்றி தங்கள் குழந்தையிடம் உள்ள சிறந்த குணாதிசயங்களை கண்டறிந்து அதில் அவர்கள் கவனத்தை திருப்பி சிறந்த முறையில் வளரச்செய்ய வேண்டும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வீட்டில் கார்டன் அமைப்பது, சமையல் செய்ய கற்றுக்கொடுப்பது போன்ற வேலைகளில் கவனத்தை திருப்பலாம். 



அதேபோல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் குழந்தைகள் வீட்டிற்கு வந்த உடனே செல் ஃபோனை கையில் எடுத்தாலோ அல்லது டிவி பார்க்க சென்றாலோ அந்த பழக்கத்தை முறியடிப்பது அவசியம். அவர்களுடன் பெற்றோர் அமர்ந்து உரையாட வேண்டும், அவர்களை பார்க் அல்லது வேறு ஏதேனும் பகுதிக்கு அழைத்து சென்று செல் ஃபோன் பயன்படுத்தும் பழக்கத்தை கைவிடச்செய்ய வேண்டும். அதேபோல் இந்த அறிவுறைகளும், பழக்கங்களும் குழந்தைகளுக்கு மட்டும்தான் என நினைத்து குழந்தைகள் முன்பு அமர்ந்து பெற்றோர் நீண்ட நேரம் செல் ஃபோன் பயன்படுத்துவதை தவிற்க வேண்டும். அந்த நேரத்தில் குழந்தைகளுடன் உடையாடல் நடத்தினால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான நெருக்கும் அதிகரிக்கும். நம்மை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு நாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.


மேலும் படிக்க | மத்திய அரசு வேலையில் சேர வாய்ப்பு - தேர்வு எதுவும் கிடையாது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ