40 வயதிலும் முடி கட்டுக்கடங்காமல் வளர இந்த பாட்டி வைத்தியம் போதும்
Hair Growth Home Remedies: பெண்கள் எப்போதும் தங்களின் தலைமுடி நீண்டு வளர வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்கு பல வழிகள் அவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் இங்கே கொண்டுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியம் முடி வளர்ச்சிக்கு பெருதும் உதவும்.
முடி பராமரிப்பு குறிப்புகள்: அனைத்து வயது பெண்களும் தங்களுக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்றே விரும்புவார்கள். இதில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முடி வளர்ச்சி (Hair Growth) நின்றுவிடுகிறது. இருப்பினும் மக்கள் பல முயர்ச்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே நீங்களும் முடி வளர்ச்சியை பெற விரும்பினால், முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் பெற சில வைத்தியங்களைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வீட்டு வைத்தியம் கட்டாயம் பலன் தரும். குறிப்பாக இவை முடி உதிர்தல் போன்ற பிரச்சனையை நீக்க உதவும். இந்த வைத்தியம் முடியின் வேர் முதல் நுனி வரை ஊட்டமளிக்கும். இந்நிலையில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எப்படி நீளமான முடியை பெறுவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
முடி வளர்ச்சிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் | Hair Growth Home Remedies:
வெங்காய சாறு: வெங்காய சாற்றில் கந்தகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சிக்கு அவசியமான புரதமாகும். இதை முடியில் தொடர்ந்து பயன்படுத்துவது விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். மேலும் முடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வைத்திருக்க உதவும்.
செயல்முறை: முதலில் வெங்காயத்தை நன்கு அரைத்து, அதன் சாற்றை தனியாக பிழித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த சாற்றை முடியின் வேர்களில் நன்கு ஒரு காட்டனின் உதவியுடன் தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு முடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
மேலும் படிக்க | ரெண்டே வாரத்துல கத்தை கத்தையா முடி வளர இந்த ஆயுர்வேத மூலிகை ஒன்று போதும்
முட்டை ஹேர் மாஸ்க்: முடி வளர்ச்சியில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் முட்டையில் அதிகப்படியான புதர சக்தி உள்ளது, இவை மயிர்க்கால்களை பலப்படுத்த உதவுவதுடன், முடியின் ஆழமான சீரமைப்பையும் வழங்குகிறது.
செயல்முறை: ஒரு பாத்திரத்தில் 2 முட்டையின் மஞ்சள் கரு மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலக்கவும். இந்த பேஸ்ட்டை தலைமுடியில் நன்றாக தடவி மூடி வைக்கவும். சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முடியை குளிக்கவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதைச் செய்யுங்கள்.
தேங்காய் எண்ணெய் மசாஜ்: முடி உதிர்வு ஏற்பட்டால் அல்லது முடி மெலிதாக இருந்தால் தேங்காய் எண்ணெயை சரியாக தடவினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். தேங்காய் எண்ணெய் முடியை பலப்படுத்துகிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், பொடுகு பிரச்சனையை போக்குகிறது.
செயல்முறை: முடி அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெயில் சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதனி ஆறவைத்து முடியின் வேர்களில் நன்கு தடவவும். இது முடி உதிர்வதைத் தடுக்க உதவும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை முடிக்கு வழங்குகிறது.
வெந்தய விதைகள்: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெந்தயத்தில் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வெந்தயம் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, முடி உதிர்வதைத் தடுக்கும். பல ஆய்வுகள் உங்கள் தலைமுடியை தடிமனாக்குவதிலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அதன் செயல்திறனைக் கண்டறிந்துள்ளன.
செயல்முறை: வெந்தயத்தை இரவு ஊறவைத்த காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து தடவவும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்கள் முதல் நுனி வரை தடவி பின்னர் கழுவினார் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்க உதவும் மற்றும் நரை முடியைத் தடுக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மிரட்டும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ