How To Handle Problems With Cool Personality : நம்மில் பலருக்கு, வாழ்வில் என்ன நடந்தாலும் ‘கெத்தாக..கூலாக’ நமது முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சிக்கல்கள் அல்லது பிரச்சனை வரும் போது நாம் நினைத்து வைத்த அந்த கெத்தெல்லாம் காற்றோடு காற்றாக பறந்து விடும். வாழ்வில் என்ன நடந்தாலும் அதை எப்படி கூலாக கையாள்வது? இதோ சில டிப்ஸ்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைதியாக இருப்பது:


>ஒரு பிரச்சனை உங்களிடம் வரும் போது நீங்கள் அதற்காக பெரிதாக ரியாக்ட் செய்தால் அது பெரிதாகத்தான் தெரியும். அதனால், முதலில் அந்த சூழ்நிலையை கையாள்வதற்கு உங்களுக்கு நீங்கள் நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இப்படி அமைதியாக இருப்பது உங்களுக்கு யோசிப்பதற்கு அதிக நேரத்தை கொடுக்கும். 


>பயம் அல்லது பதற்றம் உங்கள் மனதையும் மூளையையும் ஆட்கொள்ள விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களால் நிதானமாக அந்த பிரச்சனையை கையாள முடியும். 


பாசிடிவான அணுகுமுறை: 


>உங்கள் கைகளில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து யோசிப்பதற்கு பதிலாக அதற்கு நீங்கள் என்ன தீர்வு கொடுக்க போகிறீர்கள் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். 


>இந்த பிரச்சனை, நெடுங்காலம் நம்முடன் இருக்கப்போவதில்லை, இது கடந்து போகும் என்பதை நீங்கள் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள வேண்டும். 


தைரியமாக இருப்பது:


>எந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் போதும், உங்களுக்கு பயம் இருக்கலாம். ஆனால், கைகளில் இன்னொரு பக்கம் இருக்கும் தைரியத்தை விட்டுவிட கூடாது. 


>நீங்கள் தைரியமாக இருந்தாலும், அது குறித்து அடக்கமாக இருக்க வேண்டும். தைரியத்துடன் அடக்கமும் சேரும் போது, உங்களுக்கு பிரச்சனைக்குறிய சூழலை எப்படி சரியாக கையாள வேண்டும் என்பது தெரியும்.


பிறரிடன் கண்ணோட்டங்களுக்கு செவி சாய்ப்பது:


>ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் போது அது வெவ்வேறாக தோன்றும். எனவே, அந்த பிரச்சனை குறித்து பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதையும், அந்த பிரச்சனையால் யார் பாதிக்கப்படுகிறாரோ அவரது கண்ணோட்டத்தையும் கேட்க வேண்டும். 


>இப்படி வெவ்வேறு நபர்களின் இடத்தில் இருந்து அந்த பிரச்சனையை பார்க்கும் போது உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கலாம். 


மேலும் படிக்க | உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? ‘இந்த’ உடல்மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்!


நகைச்சுவை உணர்வு:


>நமக்கு ஒரு பிரச்சனை நடந்து முடிந்து, அதிலிருந்து கடந்து வந்த பிறகு அது குறித்து நகைச்சுவை செய்வோம். அது போல, அந்த பிரச்சனையை சமாளிக்கும் போதும் எப்போதும் இறுக்கமாக இல்லமால், கொஞ்சம் லேசான நகைச்சுவைகளை தூவலாம். ஆனால், அவை ஓவராக இருக்க கூடாது. 


ஒருங்கமைப்பு: 


>எந்த விஷயமும், ஆங்காங்கே சிதறி கிடக்கும் போது அது என்ன என்பது பிறருக்கு புரியவும் புரியாது, அதிலிருந்து தீர்வும் கிடைக்காது. எனவே, “இதுதான் நடந்தது, இதுதான் பிரச்சனை..இதற்கு என்ன தீர்வு தேடலாம்?” என்பதை தீர்மானிக்க முதலில் கலைந்து கிடக்கும் அந்த பிரச்சனையை ஒருங்கமைக்க வேண்டும். 


>அந்த பிரச்சனைக்குரிய சூழலில் முதலில் எதை செய்து முடிக்க வேண்டும், கடைசியில் எதை செய்து முடிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்பட வேண்டும்.


சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுவது:


>எல்லா பிரச்சனைகளும் ஒரே மாதிரியாக இருந்துவிடாது. எனவே, அந்த இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்றார் போல உங்களை மாற்றிக்கொள்வதோடு, நீங்கள் எடுக்கும் முடிவுகளையும் தீர்வுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ