உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? ‘இந்த’ உடல்மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்!

Body Language Tips To Look Confident : உங்களை பிறருக்கு பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? அப்போ நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்! கண்டிப்பா படிங்க..

Body Language Tips To Look Confident : பலருக்கு, தான் பிறர் கண்களுக்கு அழகானவராகவும், தெளிவனவராகவும், தைரியமானவராகவும் தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்கு நாம் மனதை எந்த அளவிற்கு தயார் படுத்திகிறோமோ, அதே அளவிற்கு உடல் மொழிகளையும் தயார் செய்து கொள்ள வேண்டும். தைரியமான உடல் மொழி என்பது, நமக்கு தினம் தோறும் தேவைப்படும் ஒரு விஷயமாகும். ஒரு நேர்காணலுக்கு செல்கையில் அல்லது புதிதாக ஒரு நபரை சந்திக்க செல்கையில் என அனைத்து நேரங்களிலும் தேவைப்படுவதுதான், நல்ல-தைரியமான உடல் மொழியாகும். இதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் தெரியுமா? இது குறித்து இங்கு பார்ப்போம். 

1 /8

உடல் மொழி: ஒரு சில வசீகரமான நபரை பார்த்ததுண்டா? அவர்கள் முகத்திற்கு மேக்-அப் போடவில்லை என்றாலும், அவர்களை பார்த்தவுடன் ஏதோ ஒரு விஷயம் ஈர்க்கும் வகையில் இருக்கும். அது என்ன தெரியுமா? அவர்களிடம் இருக்கும் தைரியமும், தனித்துவமான உடல் மொழியும்தான். இதை செய்தால் அனைவருக்கும் உங்களை பிடிக்கும். அது என்னென்ன தெரியும்? 

2 /8

மறைமுகத்தன்மை: உங்களை ஒருவர் முதன் முதலில் பார்க்கும் போது, அவர்களிடம் உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறி விட வேண்டாம். பிறர் உங்களை பற்றி என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாரோ, அதை மட்டும் தெரிவித்து, பிற விஷயங்களை கத்தரிக்க வேண்டும். அப்போதுதான் உங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிக்கொண்டே இருக்கும். 

3 /8

மென்மை சிரிப்பு: ஒருவரை சந்திக்கிறோம் என்றால், அவரிடம் உண்மையான சிரிப்பை காண்பிக்க வேண்டும். அவர் உங்களை பற்றி நல்ல விதமாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிரிக்க கூடாது. அந்த சிரிப்பு நிஜமானதாக இருக்க வேண்டும். 

4 /8

காது கொடுத்து கேட்பது: ஒரு உரையாடல் நடக்கையில் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் பேசுகையில் கேட்கவும் செய்யலாம். அப்போதுதான் அவர்களுக்கு நீங்கள் உண்மையாகவே அவர்களின் வாழ்க்கை குறித்து ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பது தெரியும். 

5 /8

தோரணை: நாம் அமரும்/நின்று பேசும் தோரணையும் கூட, நம்மை குறித்த ஒரு பிம்பத்தை பிறர் மனதில் ஏற்படுத்தும். உட்காரும் போது அல்லது நிற்கும் போது நேரே நின்று, தலையை நிமிர்த்தி இருக்க வேண்டும். 

6 /8

ஆடை: ஆள் பாதி ஆடை பாதி என்பது பேச்சுக்கு கூறும் பழமொழி என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், உன்மையில் நாம் எப்படிப்பட்டவர் என்பதை நமது ஆடைகளும் பிறருக்கு காண்பித்து கொடுக்கும். ஆகையால், வெளியில் செல்கையில் உங்கள் ஆடையை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் அவசியம் இருக்க வேண்டும். 

7 /8

அசைவுகள்: ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அல்லது அவரை சந்திக்கும் போது கால்களை ஆட்டிக்கொண்டிருப்பது, துணியை கையால் நீவிக்கொண்டிருப்பது போன்ற செய்கைகள் நாம் பயப்படுகிறோம் என்பதை காண்பித்து விடும். எனவே, யாருடன் பேசினாலும், கைகளை ஒரு சேர வைத்து, அல்லது தேவையற்ற அசைவுகளை தவிர்த்து பேசலாம். 

8 /8

பார்வை: நாம் தைரியமாக இருக்கிறோமா இல்லையா என்பதை ஒருவருடன் கண்ணுடன் கண் பார்த்து பேசுவதை வைத்து கண்டுபிடித்து விடலாம். நம்மை தைரியமாக காட்டிக்கொள்ள, எதிரில் இருக்கும் நபருடன் Eye Contact வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.