வேலையினால் வரும் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது? இதோ டிப்ஸ்!
பலருக்கு வேலை பார்க்கும் இடத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். இதை எப்படி கையாள வேண்டும் தெரியுமா?
தற்போதைய காலக்கட்டத்தில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதை எப்படி கையாள்வது என்பது பலருக்கு தெரியாது. அதற்கான டிப்ஸை இங்கு பார்ப்போம்.
வேலைகளை பிரித்தல்:
எந்த வேலையாக இருந்தாலும், அதில் அதி முக்கிய வேலை, முக்கிய வேலைகள் மற்றும் கொஞ்சம் முக்கிய வேலைகள் என சில வேலைகள் இருக்கும். இதில், அதி முக்கிய வேலைகளை முதலில் செய்து முடித்துவிட வேண்டும். அவை கடினமான வேலயாக இருந்தால், சிறிய வேலைகளை எளிதாக செய்து முடித்து விடலாம்.
இலக்குகளை நிர்ணயித்தல்:
உங்களால், முடிந்த இலக்குகளை மட்டும் நிர்ணயித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கென ஒரு காலக்கெடு வைத்துக்கொண்டு அதற்குள் முடித்து விட முயற்சி செய்யுங்கள்.
நேர மேலாண்மை:
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை, கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க பாருங்கள். தேவைப்படும் நேரத்தில் ஓய்வு எடுப்பதும் நல்லது. இப்படி செய்யும் போது, உங்கள் வேலையும் எளிதாக முடியும். உங்களுக்கு சிரமமும் இருக்காது.
ஒழுக்கம்:
நீங்கள் வேலை செய்யும் இடத்தை ஒழுக்கமாக வைத்திருங்கள். கேலண்டர், கொடுக்கப்பட்ட ப்ராஜெக்ட் கொடுத்த விவரங்களை எழுதி வைத்தல் போன்ற விஷயங்களை செய்யுங்கள்.
தெளிவாக எடுத்துரைத்தல்:
உங்களுக்கு இருக்கும் வேலை பளுவை உங்கள் மேலாளரிடம் எடுத்துரைக்க வேண்டும். அதை குறைக்க உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் சேர்ந்து அந்த வேலையை முடிக்கலாம்.
மைண்ட்ஃபுல்னெஸ் பயிற்சி:
தியானம் செய்வது, மூச்சுப்பயிற்சி செய்வது, ஜர்னல் எழுதுவது, கவனச்சிதறல் இல்லாமல் இருப்பது போன்ற பயிற்சிகளை செய்யுங்கள். இது, உங்களை கவனத்துடன் அமர்ந்து வேலை பார்க்கவும், மகிழ்ச்சி மனப்பான்மையை வளர்க்கவும் உதவும்.
ஆரோக்கியம்:
வேலை, பணம் சம்பாதிப்பது என்பதை தாண்டி, உங்கள் உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை நீங்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
மேலும் படிக்க | வாழ்வில் நினைத்த அனைத்தையும் சாதிக்க ரத்தன் டாட்டா கூறிய 8 வழிகள்!!
நோ சொல்ல கற்றுக்கொள்வது:
வாழ்க்கை என்றால், அனைத்து நேரங்களிலும் நம்மால் அனைத்திற்கும் ஆமாம் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. எனவே, சில விஷயங்களுக்கு நீங்கள் நோ சொல்ல கற்றுக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான், உங்களுக்குள் நீங்கள் வைத்துக்கொண்டிருக்கும் தகுதியும் உயரும்.
ஆதரவு:
மனிதராக பிறந்த அனைவருக்குமே, ஏதேனும் ஒரு நபர் ஆதரவாக இருக்க தேவைப்படுவார். காரணம், மனிதர்களாக பிறந்த நாம் அனைவருமே சமூக மிருகங்களாக இருப்போம். எனவே, உங்களுக்கு தெரிந்த நபரிடம், நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.
தவறுகள்..
நாம் செய்யும் வேலையில் மட்டுமல்ல, வாழ்க்கையில் கூட பல்வேறு தவறுகளை இழைப்பாேம். இந்த தவறுகள் நமக்கு திருந்தவும், பல்வேறு விஷயங்களை திருத்திக்கொள்ளவும் வாய்ப்பை கொடுக்கும் எனவே, ஒரு தவறினை இழைத்து விட்டால் அதில் அப்படியே நிற்காமல், அதிலிருந்து கற்றுக்கொண்டு இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்.
மேலும் படிக்க | ‘இதை’ செய்தால் இனி முடி கொட்டவே கொட்டாது! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ