தீபாவளிக்குள் பளபளப்பான கொரிய சருமம் வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்!
Korean Glass Skin Tips : நம் முகம், பளபளப்பாக இருக்க சில ஈசியான டிப்ஸ் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
Korean Glass Skin Tips : பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ தினங்கள் நெருங்க ஆரம்பித்துவிட்டன. இந்த நல்ல நாட்களில் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றும் பொலிவுடன் காணப்பட வேண்டும் என்றும் பலர் விரும்புவர். அதிலும் கொடிய சினிமாக்களையும் தொடர்களையும் பார்த்து ரசித்து வருபவர்கள் தங்களது சருமமும் அதே போல இருக்க வேண்டும் என்று விரும்புவர். வரும் தீபாவளிக்குள் உங்கள் முகம் பளபளப்பாகவும் பலிவாகவும் மாற சில டிப்ஸ் இதோ.
கிலேன்சிங்:
முகம், காய்ந்து போய் அல்லது வறண்ட சருமமாக இருந்தால் கண்ணாடி போன்ற சருமத்தை பெறுவது கொஞ்சம் கடினம். எனவே, உங்கள் முகம் வறட்சி பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க, ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உங்கள் முகத்தை நன்றாக க்ளென்சிங் செய்ய வேண்டும். மேக்-அப் போடுகிறீர்கள் என்றால் இரண்டு முறை மாலை நேரங்களில் க்ளென்ஸ் செய்ய வேண்டும்.
Exfoliation (தோல் பராமறிப்பு):
வாரத்தில் 1 முதல் 2 முறை Exfoliation செய்ய வேண்டும். இந்த முறையில் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்து போன செல்கள் அனைத்தையும் நீக்க முடியும். சருமம் பொலிவு பெறாமல் இருக்க காரணமாக இருப்பது இந்த இறந்து போன செல்கள்தான். இதை நீக்கினாலே சருமம் மென்மையாக ஆரம்பித்து விடும்.
Toner உபயோகித்தல்:
உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, பிற பியூட்டி பொருட்களை சருமம் உறிஞ்சுக்கொள்ள டோனர் உபயோகிக்கலாம். ரோஸ் வாட்டர், இயற்கையான மூலிகைகள் சில இதற்கு உதவலாம்.
தினசரி ரொட்டீன்:
உங்கள் சரும பராமரிப்பு ஒரு நாள் மட்டும் இருந்தால் போதாது. அதை தினசரி வழக்கமாக மாற்ற வேண்டும். பதப்படுப்பட்ட பொருட்களை சருமத்தில் தடவுவதுன் மூலம், இதனை பொலிவாக்கலாம். அரிசி ஊர வைத்த நீர், அரிசி மாவு உள்ளிட்டவற்றை தேய்க்கலாம்.
முக சீரம்:
வைட்டமின் சி அடங்கிய முக சீரத்தை சருமத்தில் தேய்க்கலாம். பல சமயங்களில் அனைத்து நேரங்களிலும் ஒரே கலர் முகத்தில் இருக்காது. ஒரு இடத்தில் கலர் அதிகமாகவும், ஒரு இடத்டில் கலர் கம்மியாகவும் இருக்கலாம். இதை சமன் செய்ய சீரம் உபயோகிக்கலாம்.
மேலும் படிக்க | முகத்திற்கு பளபள பொலிவு கிடைக்க தயிரை இப்படி பயன்படுத்துங்கள்
ஈரப்பதமாக்குங்கள்:
நல்ல மாய்ஸ்ட்ரைசர்களை முகத்தில் தடவ வேண்டும். அது ஜெல் போல இருந்தால் மிகவும் நல்லது. க்ரீம் போல இருக்கும் மாய்ஸ்ட்ரைசர்கள் வரண்ட சருமத்திற்கு உதவும்.
ஷீட் மாஸ்க்:
வாரத்தில் 2 அல்லது 3 முறை ஷீட் மாஸ்க் உபயோகிக்க வேண்டும். முகத்திற்கு பொலிவு கொடுக்கவும், அழுக்கை அகற்றவும் இதனை உபயோகிக்கலாம். இதை உபயோகிப்பதால் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதோடு திறந்து கிடைக்கும் துளைகளை மூடவும் உதவும்.
சன்ஸ்க்ரீன்:
திருவிழாக்காலங்களில் மட்டுமல்ல, சாதாரணமாகவே சன்ஸ்க்ரீன் உபயோகிப்பது மிகவும் நல்லது. வெயிலினால் முகத்தின் நிறம் மாறுவதை தடுப்பதோடு, யுவி கதிர்களினால் சருமம் பாதிப்படைவதையும் சன்ஸ்க்ரீன் தடுக்கிறது. அது மட்டுமல்ல, முகத்தை பளபளப்பாக்கி பொலிவாக்கவும் உதவும்.
மேலும் படிக்க | பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ