பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!

ஃபேஷியல் செய்ய பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இது போன்ற சமயங்களில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முக பொலிவை பெற முடியும்.   

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2024, 06:33 AM IST
  • பார்லர் செல்ல நேரம் இல்லையா?
  • பால் மூலம் சரும பொலிவை கொண்டு வரலாம்.
  • முகத்தில் பளபளப்பைக் கொண்டுவர இது உதவுகிறது.
பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்! title=

முகத்தை பளபளப்பாக மற்றும் இளமையாக வைத்து கொள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் நிறைய தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன்பு கூடுதல் பொலிவுடன் இருக்க ஃபேஷியல் செய்து கொள்கின்றனர். ஒருசிலர் மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை முகத்திற்கு பேஷியல் செய்து கொள்கின்றனர். இதன் மூலம் சருமம் எப்போதும் பொலிவுடன் காணப்படுகிறது. ஃபேஷியல் செய்யும் போது முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதன் காரணமாக சருமத்தில் உள்ள செல்களுக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கிறது மற்றும் முகம் பொலிவு பெறுகிறது.

மேலும் படிக்க | Liver Damage Signs On Skin: சருமத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கட்டாயம் கல்லீரல் பாதிப்பா இருக்கும்

ஆனால் அடிக்கடி ஃபேஷியல் கிரீம்களை முகத்தில் தடவுவது சரும பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சருமத்தை நச்சுத்தன்மையாக்க மாற்றுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட இடைவெளியில் பேஷியல் செய்து நல்லது. அப்போது தான் முகம் சுத்தமாகவும், பளிச்சென்றும் இருக்கும். அப்படி பண்ணாத பட்சத்தில் சருமத் துளைகள் அடைத்து சருமம் மந்தமாகத் தோன்றும். வேலை பிசியில் பார்லர் சென்று பேஷியல் செய்து கொள்ள நேரமில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் உதவுகிறது. செலவே இல்லாமல் வீட்டில் இருந்து பொலிவை தர உதவுகிறது. 

பால் மற்றும் மஞ்சள் கலவை

பச்சை பாலில் மஞ்சள் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் தொல்லை நீங்கும். மேலும், கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களில் இருந்து நிவாரணம் பெற இந்த கலவை உதவுகிறது. பாலில் சிறிது மஞ்சள் கலந்து பேஸ்ட்டை தயார் செய்த பிறகு, நல்ல துணிகளை கொண்டு முகத்தில் தடவுங்கள். ஐந்து முதல் பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் பளபளப்பாக இருக்கும். 

முல்தானி மிட்டி மற்றும் பால் கலவை

முல்தானி மிட்டி பல நன்மைகளை நமக்கு தருகிறது. இதனை முகத்தில் தடவி வந்தால் சுருக்கங்களை நீக்குகிறது. முல்தானி மிட்டியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து முதல் பத்து நிமிடம் காய வைக்கவும். பிறகு தண்ணீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் குறையும்.

பச்சை பால் மற்றும் தேன் கலவை

சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை பெற தேன் மற்றும் பால் கலவை உதவிகரமாக இருக்கும். பாலில் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்யவும். பிறகு நன்கு முகத்தில் ஊறவைத்துவிட்டு முகத்தை கழுவினால் புது பொலிவு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | High Uric Acid உள்ளவர்கள் இந்த 1 காய்கறியை கட்டாயம் சாப்பிட வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News