பான் கார்டு வங்கி கணக்கு திறப்பு, வங்கி தொடர்பான வேலைகள், வருமான வரி மற்றும் பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. தற்போது பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்தஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினால் கூட பான் கார்டு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். எப்படி பல்வேறு இடங்களில் பான் கார்டு பயன்படுத்தப்படுவதால், நமது தகவல்கள் தவறான நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். இன்றைய சூழலில் இணையம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கிரெடிட் கார்டு, ஆன்லைன் மூலம் கடன் மற்றும் சில விஷயங்களில் உங்களது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே பான் கார்ட் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக நீங்கள் எண்ணினால் உடனே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Budget 2024: சாமானிய மக்களுக்கு காத்திருக்கும் ஜாக்பட்... அடிப்படை வரி விலக்கு வரம்பில் மாற்றம்?


உங்கள் பான் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?


தினசரி இல்லை என்றாலும் அவ்வப்போது உங்களது வங்கி அறிக்கைகள் மற்றும் கிரெடிட் கார்டு பில்கள் என அனைத்து நிதி தொடர்பான தகவல்களையும் போன்றவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நீங்கள் செய்யாத ஏதேனும் பரிவர்த்தனைகள் இருந்தால் உடனே வங்கிக்கு புகார் அளிக்க வேண்டும். உங்களது பெயரில் உள்ள வங்கி கடன்களை பற்றி அவ்வப்போது சரி பார்க்க வேண்டும். CIBIL அல்லது வங்கிகள் மூலம் உங்களது கடன் பற்றிய தகவல்களை பெறலாம். உங்களது ஏதேனும் ஒரு பரிவர்த்தனையில் சந்தேகம் இருந்தால் கூட உடனே வங்கிக்கும் தகவல் தெரிவிக்கவும். 


நீங்கள் வருமானவரி செலுத்தவில்லை என்றாலும் உங்கள் வருமான வரி கணக்கை சரி பார்த்து கொள்ளவும். இதனை தெரிந்து கொள்ள வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் உங்கள் பான் கார்டு விவரங்களை உள்ளிட்டு சரி பார்க்கலாம். அதில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனை இருந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும். மேலும் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பெயருக்கு எதிராக ஏதேனும் நிதிப் பரிவர்த்தனை நடைபெறுகிறதா என்பதை தெரிந்து கொள்ள படிவம் 26AS விவரங்களையும் நீங்கள் சரி பார்த்து கொள்ளலாம்.


உங்கள் பான் தவறாக பயன்படுத்தப்பட்டால் எப்படி புகார் அளிப்பது?


உங்களது நிதி பரிவர்த்தனை, வங்கி கணக்குகள் மற்றும் வருமான வரி அறிக்கை மூலம் உங்களது பான் கார்ட் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்தால் உடனடியாக வங்கி அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு தெரிவிக்கவும். இதன் மூலம் இந்த மோசடியில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும். மேலும் உங்களது பான் கார்ட் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் சரியான ஆதாரத்துடன் கண்டுபிடித்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதன் மூலம் நீங்கள் சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்ள முடியும். ஆன்லைன் மூலம் புகார் அளிக்க TIN NSDL அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அதில் வாடிக்கையாளர் பராமரிப்புப் பிரிவில் ‘புகார்/கேள்விகள்’ என்பதை தேர்வு செய்து அதில் உள்ள அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.


மேலும் படிக்க | Budget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ