தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) பெறுவதற்கு முன்பெல்லாம் தொழிலாளர்கள் வாரம், மாத கணக்கில் அலைய வேண்டியிருந்தது. இந்த சேவைகள் அனைத்தையும் மத்திய அரசு இணையவழிக்கு கொண்டு வந்தவுடன், தொழிலாளர்கள் வெகு சீக்கிரம் தங்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற்றுவிடுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்களின் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைனிலேயே பெற வேண்டும் என்றால் ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை கட்டாயம் யுஏஎன்-உடன் இணைத்திருக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் உங்களுக்கு யுஏன் ஒன்று கொடுத்துவிடுவார்கள். ஒருமுறை யுஏஎன் பெற்றுவிட்டால், எத்தனை நிறுவனங்கள் மாறினாலும் அந்த யுஏஎன்-ஐயே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை வேண்டாம் என்றால், அந்த கணக்கை மூடிவிட்டு வேறு அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளவும் வசதி இருக்கிறது.


மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்


இது ஒருபுறம் இருக்க, இருக்கும் யுஏஎன்-ல் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பது எப்படி? என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. இங்கே பிஎப் அக்கவுண்டுடன் பான் கார்டை இணைப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


பிஎப் அக்கவுண்டுடன் பான் கார்டை இணைப்பது எப்படி?


* EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்திற்குச் செல்லவும்.


* உங்களின் UAN சான்றுகளுடன் உங்கள் கணக்கில் உள்நுழையவும்.


* நிர்வகி தாவலுக்குச் சென்று கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘KYC’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


* PAN ஐத் தேர்ந்தெடுக்கவும்.


* உங்கள் PAN இன் விவரங்களை உள்ளிட்டு சேமிக்க கிளிக் செய்யவும்.


 


மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!


மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?


மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ