புடவையில் ஒல்லியாக தெரிவது எப்படி? இதோ சில ஈசியான டிப்ஸ்!
உடல் பருமனுடன் இருக்கும் பலருக்கு, புடவையில் ஒல்லியாக தெரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதை நிறைவேற்றுவது எப்படி?
நல்ல நாட்களில், பண்டிகை நாட்களில் பலருக்கு புடவை கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், உடல் எடை அதிகமாக இருப்பவர்களில் சிலருக்கு புடவை கட்டினால் தொப்பை தெரியுமோ, மிகவும் குண்டாக தெரிந்து விடுவோமோ என்ற பயம் இருக்கும். இந்த பயத்தை விடுத்து, புடவையில் ஒல்லியாக, ஃபிட்டாக தெரிவது எப்படி? இங்கே தெரிந்து கொள்வோம்.
புடவையில் ஒல்லியாக தெரிவது எப்படி?
புடவை, நம் அழகை எக்ஸ்ட்ராவாக தூக்கி கொடுக்கும். அது மட்டுமன்றி, சாதாரணமாக இருக்கும் உருவத்தை விட சரியாக புடவை கட்டினால் நாம் கொஞ்சம் ஒல்லியாகவே தெரியலாம்.
நிறத்தை தேர்ந்தெடுங்கள்..
நாம் எந்த உடையிலும் ஒல்லியாக தெரிவதற்கும், நாம் உடுத்தும் உடைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. லைட்டான நிறங்களை உடுத்துவதை விட்டுவிட்டு, உங்கள் நிறத்திற்கு பொருந்தும் டார்க் ஆன கலர் புடவைகளை தேர்ந்தெடுங்கள். கருப்பு, நேவி ப்ளூ, மெஜந்தா கலர் ஆகிய கலர் புடவைகளை கட்டினால், உங்கள் உருவத்தை விட உங்கள் புடவையின் கலரின் மீது பலருக்கு கவனம் திரும்பும்.
சிறந்த ஃபேப்ரிக்..
நாம் உடுத்தும் புடவையின் ஃபேப்ரிக்குகளும் நமது உருவத்தை ஒல்லியாகவோ குண்டாகவோ காண்பிக்கலாம். உடலுடன் ஒட்டும், உடலை பெரிதாக காண்பிக்காத ஃபேப்ரிக் புடவைகளை தேர்ந்தெடுப்பது சிரந்தது.
புடவையின் டிசைன்..
புடவைகளில் உள்ள டிசைனகளும் உங்களது உருவத்தை பிறருக்கு எடுத்து காண்பிக்கும். நன்கு விரிந்த, கல் அல்லது ஜரிகை வேலைபாடுகள் செய்த புடவைகள் பார்ப்பதற்கும் உடுத்துவதற்கும் சிறந்தது. டிசைனே இல்லாத புடவைகளிலும், புடவையின் முந்தி மற்றும் பார்டர்களில் இருக்கும் டிசைன்கள், உங்களின் உருவத்தினை ஒல்லியாக காண்பிப்பதற்கு சிறந்தது. உங்களுக்கு, மேல் உடம்பு பெரிதாக இருக்கும் என்றால் புடவையின் முந்தியில் அதிகம் டிசைன் இருக்கும் புடவையை உடுத்துவது சிறந்தது.
மேலும் படிக்க | முகத்தில் இருக்கும் கருத்திட்டுக்களை அகற்ற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்கள் போதும்!
புடவையுடன் உடுத்தும் அணிகலன்கள்..
புடவை உடுத்துகையில், அதனுடன் நாம் அணியும் அணிலன்களும் பெரிய பங்கு உண்டு. எனவே, நீங்கள் உடுத்தும் புடவைகளுக்கு ஏற்ற அணிகலன்களை அணியுங்கள். அது மட்டுமன்றி, புடவைக்கு ஏற்றார் போல ப்ளவுசையும் அணிய வேண்டும். ப்ளவுஸ்களில் எக்கச்சக்க டிசைன்கள் உள்ளன. போட் நெக், நாட்டட் ப்ளவுஸ், பட்டர்ஃப்ளை ப்ளவுஸ், பஃப் ப்ளவுஸ் என பல வகைகள் உள்ளன. கை பெரிதாக இருப்பவர்கள், அரை கை இல்லாமல் முக்கால் கை அளவிற்கு ப்ளவுஸை தைத்து கொள்ளலாம். இதனால் நீங்கள் கொஞ்சம் ஒல்லியாக தெரிவீர்கள்.
சரியாக புடவை உடுத்துதல்..
சமயங்களில், பலர் புடவையை ஒழுங்காக கட்டவில்லை என்றால் கண்ணாடி முன்பு நிற்கும் போது மிகவும் குண்டாக தெரிவர். புடவையின் முந்தி மற்றும் கொசுவம் ஆகியவற்றை வைக்கும் போது, சரியாக வரிசையாக வைக்க வேண்டும். குறிப்பாக கொசுவம் வைக்கையில் அதை சரியாக எடுக்கவும். இதை சரியாக செய்தால் உங்கள் வயிறு இருக்கும் சைஸை விட சின்னதாக தெரியும்.
ஒற்றைப்படை
குண்டாக இருப்பவர்கள், பல வரிசைகளுடன் முந்தானையை ரெடி செய்வதை விட, ஒற்றைப்படையை வைத்து கட்டலாம். இது, உங்களின் புடவையின் அழகையும் உங்களின் அழகையும் நன்றாக காண்பிக்கும். இதனால் உங்களது பாதி உடம்பை கூட மறைக்கலாம்.
மேலும் படிக்க | காதல் உறவில் இருப்பவரா நீங்கள்? அப்போ ‘இந்த’ 4 உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ