உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி..? இந்த டிப்ஸை படிங்க..!
Weight Loss Tips Tamil: உடற்பயிற்சி செய்ய பிடிக்கவில்லை ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உடற்பயிற்சிகள் இன்றி கூட உடல் எடையை குறைக்கலாம். இதற்கு டயட் இருக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. மன உறுதியும் சில வாழ்வியல் மாற்றங்களும் மட்டும் போதும். உடல் எடையை குறைப்பது எளிதில் சொடக்கு போட்டவுடன் நடந்து விடாது. அதற்காக பலர் பல மெனக்கெடல்களை மேற்கொள்வர். ஆனாலும் அவர்களுக்கு பலன் கிடைக்காமல் இருக்கும். "Smart work is better than Hard work" என்று கூறுவார்கள். அந்த வகையில், ஸ்மார்ட் வர்க் செய்து உடல் எடையை குறைப்பது எப்படி? இங்கே பார்ப்போம்.
எடையை அதிகரிக்காமல் தடுப்பது எப்படி?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அதிகளவில் குறைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருந்தாலே அதற்கு போதுமானதாக இருக்கும்.
எடை குறைய, உணவுகளை பகுதிகளாக பிரித்து எடுத்து கொள்ளலாம். குறைந்த கலோரிகளுடனும் அதிக நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளையும் எடுத்து கொள்ளலாம். எண்ணெயில் பொறித்த ஆரோக்கியமற்ற உணவுகளை எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இது, உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
ஸ்நாக்ஸிற்கு பதில் என்ன சாப்பிடலாம்?
தேவையற்ற, ஆரோக்கியமே இல்லாத ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவதற்கு பதிலாக ஹெல்தியான ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, நட்ஸ் வகைகள். அக்ரூட் பருப்புகள், பாதாம் பருப்புகள் போன்ற நட்ஸ் வகைகளை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்ளலாம். இவற்றையும் சிறிதளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சமாக எடுத்து கொண்டாலும் இவை நமக்கு வயிறு நிரம்பிய உணர்வினை தருகிறது. இதனால் நாம் பசியை கட்டுக்குள் வைக்கலாம். உடலுக்கு தேவையான அளவு வைட்டமின்களும் மினர்ல்ஸ்களும் இந்த ஸ்நாக்ஸ் வகைகளில் இருந்து கிடைக்கும்.
பருப்பு வகைகள்:
உடல் எடையை உடற்பயிற்சி செய்யாமல் குறைக்க விரும்புவோர், பருப்பு வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பீன்ஸ், பட்டாணி, கடலைப்பருப்பு உள்ளிட்ட புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதை சிறிதளவூ எடுத்துக்கொண்டாலே வயிறு நிரம்பி விடும். இதனால் அடிக்கடி பசி எடுக்காது. கலோரிகளும் இந்த வகை உணவுகளால் உருவாகாது.
சாலட் மற்றும் சூப் உணவுகள்:
திடமான அல்லது செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும் உணவுகளை தவிர்த்து எளிதில் ஜீரணிக்கும் வகை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். சாலட் மற்றும் சூப் வகை உணவுகள் அதில் அடங்கும். இதில், உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்துக்களும் கிடைக்கும். இதை முக்கிய உணவாக எடுத்துக்கொள்வது உடல் எடையை விரைவிலேயே குறைக்க உதவும்.
பானங்கள்..
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க நாம் கலோரி நிறைந்த பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை கலந்த டி-காபி உள்ளிட்டவற்றை அறவே தவிர்க்க வேண்டும். குளிர் பானங்கள், சோடா வகை பானங்கள் ஆகியவற்றின் பக்கம் திரும்பவே கூடாது. இதை தவிர்த்து விட்டு கிரீன் டீ குடிக்கலாம். இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும். பிளாக் காபி குடிக்கலாம். இதனால் அடிவயிற்று காெழுப்பு கரையும். ஆனால், பிளாக் காபியை போதுமான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | 30 நாளில் உடல் எடை குறைய இத மட்டும் சாப்பிட்டால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ