சுவை மிக்க எலுமிச்சை சாதம் மற்றும் தக்காளி சட்னி செய்வது எப்படி?
எலுமிச்சை சாதம், இந்தியாவின் பிரபலமான ஆறுதல் உணவாகும். இந்த துடிப்பான உணவை சமைக்க சில நிமிடங்கள் மட்டுமே ஆகும், இதன் காரணமாகவே இந்த உணவிற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
எலுமிச்சை சாதம், இந்தியாவின் பிரபலமான ஆறுதல் உணவாகும். இந்த துடிப்பான உணவை சமைக்க சில நிமிடங்கள் மட்டுமே ஆகும், இதன் காரணமாகவே இந்த உணவிற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
நாடு தழுவிய பூட்டுதலில் நாம் பல வாரங்களாக வீட்டிலேயே இருக்கிறோம். தினம் தினம் வழங்கமான உணவை சமைத்து நாம் சலித்து போய் இருக்கும் நிலையில், சற்று எளிய முறையில் வித்தியாசமான உணவு ஒன்றை சமைத்து உண்டால் என்ன. சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.
மிகவும் விரும்பப்படும் இந்த எலுமிச்சை சாதத்தை தயாரிக்க, உங்களுக்கு குறைந்த அளவிலான சமைத்த சமைத்த சாதம் தேவைப்படும், சில கறிவேப்பிலை, வேர்க்கடலை, சிவப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், கள்ளப் பருப்பு, உப்பு, கடுகு விதைகள், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு போன்றவையும் தேவைப்படும்.
செய்முறை: எலுமிச்சை சாதத்தை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தை தேர்வு செய்யுங்கள். அந்த பாத்திரத்தை சற்று சூடேற்றி, சிறிதளவு எண்ணெய் விட்டு சூடேற்றவும். பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு, கள்ளப்பருப்பு கறிவேப்பில்லை ஆகியவற்றை இட்டு தாளிக்கவும், இத்துடன் சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள் இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். மணம் வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பின்னர் எலுமிச்சை சாறை கலவையில் சேர்க்கவும். அவ்வளவு தான். சிறிது நேரம் கழித்து இந்த கலவையில் சமைத்து எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து கிளரி பரிமார வேண்டும். சாதத்தின் சுவையை கூட்ட தக்காளி சட்னி அல்லது, புதினா சட்னி சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த தக்காளி சட்னியும் தயார் செய்வது அவ்வளவு கடினமானதல்ல. தக்காளி சட்னிகள் நம் நாட்டில் பல வழிகளில் தயாரிக்கப்படுகின்றன. வங்காளத்தில் இது சற்று இனிமையானதாக இருக்கும்., ஆனால் தமிழகத்தில் இது கொஞ்சம் காரமானதாக இருக்கும்.