அயல் நாட்டில் இருந்து வந்த பீட்ஸாவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். மைதா மாவினால் செய்யப்படும் இந்த பீட்ஸாவை கடையில்தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடலாம். சொல்லப்போனால் வீட்டிலேயே செய்து சாப்பிடும் பீட்ஸாக்கள்தான் உடலிற்கும் கேடு விளைவிக்காது. சரி, இந்த பீட்ஸாவை செய்வது எப்படி? சிம்பிள் ரெசிபி இதோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கிய பொருட்கள்..


இந்தியாவை பொறுத்த வரை பீட்ஸாவில் பல வகைகள் உள்ளன. இதில், சிக்கன் பீட்ஸா, சீஸ் பீட்ஸா போன்ற வகைகள் மிகவும் பிரபலம். பீட்ஸா செய்வதற்கு அடிப்படையாக மூன்று பொருட்கள் தேவை. முதலில் தேவைப்படும் விஷயம், பீட்ஸா மாவு. இதை ஆங்கிலத்தில் Pizza Base என்பர். பிறகு தேவைப்படுவது பீட்ஸா சாஸ், இறுதியாக டாப்பிங்க்ஸ் ஆகியவை தேவைப்படும். மேலும் நமக்கு தேவையான காய்கறிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தி கொள்ளலாம். 


சுவையான குறிப்புகள்:


>பீட்ஸாவை பலர் மைதா மாவு கொண்டு செய்கின்றனர். நீங்கள் செய்ய விரும்பும் பீட்ஸாவிற்கு மைதா மாவு பயன்படுத்தலாம் அல்லது கோதுமை மாவையும் உபயோகிக்கலாம். அப்படி இல்லையென்றால் இரண்டையும் சம அளவு கலந்தும் உபயோகப்படுத்தலாம். 


>வீட்டிலேயே பீட்ஸா சாஸ் செய்து கொள்ளலாம். அல்லது கடையிலும் வாங்கி கொள்ளலாம். பீட்ஸா சாஸ் செய்ய தக்காளி சாஸ், உப்பு, சர்க்கரை, பூண்டு ஆகியவை தேவைப்படும். 


>பீட்ஸா டாப்பிங்க்ஸிற்கு நீங்கள் விரும்பும் காய்கறிகள், சிக்கன், பன்னீர் போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். 
பீட்ஸா செய்ய தேவையான பொருட்கள்:


>1 கப் மைதா மாவு அல்லது கோதுமை மாவு
>தேவையான அளவு உப்பு
>1 தேக்கரண்டி சர்க்கரை
>1 தேக்கரண்டி Yeast
>1/2 கப் வெந்நீர்
>3 தக்காளி
>1 பெரிய வெங்காயம்
>5 பல் பூண்டு
>1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்.
>1 தேக்கரண்டி சர்க்கரை
>2 தேக்கரண்டி ஓரிகேனோ
>1/2 தேக்கரண்டி மிளகு தூள்
>2 தேக்கரண்டி தக்காளி சாஸ்


மேலும் படிக்க | மிஷன் 3000 மெட்ரிக் டன்... அலுமினியம் ரயில் பெட்டிகள்... ரயில்வேயின் அசத்தல் திட்டம்!


டாப்பிங்ஸிற்கு..


>மாட்ஸரில்லா சீஸ்
>2 ஸ்லைஸ் செடார் சீஸ்
>பெரிய வெங்காயம் நறுக்கியது 
>குடைமிளகாய் நறுக்கியது
>நறுக்கிய காளான் சிறிதளவு
>கருப்பு ஆலிவ் துண்டுகள்
>உப்பு தேவையான அளவு
>அரை தேக்கரண்டி மிளகு தூள்
>1 டீஸ்பூன் எண்ணெய்


பீட்ஸா மாவு செய்முறை:


>பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, யீஸ்ட், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். 


>இதனுடன் சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு பிசைய வேண்டும். 


>இன்னொரு பெரிய பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்த மாவை ஒரு மணி நேரத்திற்கு நன்றாக காற்று போகாத அளவிற்கு மூடி வைக்கவும். 


பீட்ஸா சாஸ்:


>3 தக்காளி, பெரிய வெங்காயம், 5 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து வேகவைக்கவும். 


>மேற்கூறியவற்றை 10-12 நிமிடங்கள் வரை வேகவிட்ட பிறகு, தக்காளியின் தோலை உரித்து அனைத்தையும் அரைத்து எடுத்துக்கொள்ளவும். 


>ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ளவும். 


>இவற்றுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, 2 தேக்கரண்டி ஓரிகனோ, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், இரண்டு தேக்கரண்டி தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். 


>10-15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் இவற்றை வேக விட வேண்டும். 


டாப்பிங்க்ஸ் செய்முறை:


>ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், குடை மிளகாய், காளான் ஆகியவற்றை வதக்கி எடுத்துக்கொள்ளவும். இதை 1 நிமிடத்திற்கு வதக்கலாம். 


>இதனுடன் தேவையான அளவு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி எடுத்துக்கொள்ளலாம். 


பீட்ஸா:


>உங்கள் வீட்டில் oven இருந்தால் அதை 425/215 செல்சியஸில் முன்கூட்டியே ப்ரீ ஹீட் செய்து விடுங்கள். அப்படி oven இல்லையென்றால் அகலமான பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதிக தீயில் 10 நிமிடங்களுக்கு சூடாக்கவும். 


>உப்பி வந்த பீட்ஸா மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்து இரண்டாக பிளந்து எடுத்துக்கொள்ளுங்கள். 


>ஒரு பகுதியை நன்றாக தட்டி எடுத்துக்கொள்ளுங்கள். 


>ஒரு தட்டில் எண்ணெய் தடவி பீட்ஸாவை போட்டுக்கொள்ளவும். அதில், ஃபோர்க் ஸ்பூனை வைத்து சிறு சிறு துளைகளை இட்டு எடுத்துக்கொள்ளலாம். 


>பீட்ஸா மாவில் முன்னர் தயாரித்த பீட்ஸா சாஸை தடவிக்கொள்ளவும். 


>மோஸரெல்லா சீஸ் துண்டுகளை சிறிது சிரிதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். 


>முன்னர் தயாரித்த டாப்பிங்க்ஸை அதன் மீது துவி கொள்ளலாம். 


>2 செடார் சீஸ் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். 


>ஒவனில் வேக வைப்பதாக இருந்தால் 10-12 நிமிடங்களுக்கு வேக வைக்கலாம். பாத்திரத்தில் வைத்தால் 15-20 நிமிடங்களுக்கு வேக வைக்கலாம். அப்படியே சாஸுடன் சாப்பிட்டால் சுவையான பீட்ஸா தயார். 


மேலும் படிக்க | அனுஷ்காவின் பளபள தேகத்திற்கு இதுதான் காரணமா..? வெளியானது ஸ்கின் கேர் சீக்ரட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ