காதல் அல்லது காதல் கலந்த ஏதேனும் ஒரு உறவு என்று வந்துவிட்டாலே அதில் சண்டைகளும் சச்சரவுகளும் வந்து கொண்டுதான் இருக்கும். இது சகஜம் என்பதை மனதில் நிறுத்தி, உங்கள் அன்புக்குரியவரை எப்படி சமாதானம் செய்யலாம் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதலில் சண்டை: 


காதலர்களுக்குள் சண்டை வருவது வழக்கமான ஒன்று. எந்த காதல் உறவும் சரியானது என்று சொல்லிவிட முடியாது. நாம் நம்மை அறியாமல் நமது அன்பிற்குரியோரை எப்போதாவது மனதளவில் காயப்படுத்தி விடுவோம். இது, சமயங்களில் அவர்களை அதிகமாக பாதித்து விடும். இதனால் அவர்கள் உங்களிடம் கோபமாக இருக்கலாம். கோபமாக இருப்பதற்கான காரணங்களை உங்களிடம் தெரிவிக்காமலும் இருக்கலாம். அவர்கள் உங்களிடம் பேசுவதிலோ அல்லது உங்களிடம் நடந்து கொள்ளும் விதத்திலோ ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால், யோசிக்காமல் என்ன என்று கேட்டு தெரிந்து கொள்வது நலம். அப்படி உங்களுக்குள் நடந்த ஏதேனும் ஒரு விஷயத்திற்காக அவர்கள் உங்கள் மீது கோபமாக இருந்தால் அதை சமாதானம் செய்ய இங்கு சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | இனி செப்பல் வாங்கும் போது இந்த விஷயங்களை பார்த்து வாங்குங்க!


1. பேசுங்கள்


உங்கள் காதலனோ காதலியோ திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டால் அதற்கான காரணம் என்ன என்று கேளுங்கள். அவர்கள் முதலில் கோபமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துக்கொள்ளுங்கள். எதனால் இந்த கோபம்? ஏன் என் மீது கோபம்? போன்ற கேள்விகளுக்குப்பின் நான் என்ன செய்தால் இது சரியாகும் என்ற கேள்வியை கேளுங்கள். உங்கள் மீது தவறு என்று தெரிந்தால் யோசிக்காமல் மன்னிப்பு கேளுங்கள். 


2.அவர்களுக்கான நேரத்தை கொடுங்கள்: 


உங்களது அன்புக்குரியவர் உங்களுடன் ஏறபட்ட மனக்கசப்பினால் உங்களிடம் பேசாமல் இருந்தால் என்ன விஷயம் என்று கேளுங்கள். அவர்கள், கொஞ்சம் நேரம் என்னை தனியாக விடு என்று கூறினால் அவரை விட்டு சிறிது நேரம் தள்ளி இருங்கள். “எப்போது வந்து பேசினாலும் நான் இங்குதான் இருக்கிறேன்..:” என்பதை அவரிடம் தெரியப்படுத்துங்கள். அவரே தோனும் போது உங்களிடம் வந்து தெரியப்படுத்துவார். 


3.காது கொடுத்து கேளுங்கள்: 


கோபமாக இருக்கும் காதலனோ, காதலியோ அந்த கோபம் குறைந்த பின்னர் கண்டிப்பாக உங்களிடம் பேச வருவார். அப்போது நீங்கள் அவரிடம் முழு கவனத்தையும் செலுத்தி அவர் கூறுவதை காதுகொடுத்து கேளுங்கள். அவர் எதை பேசினாலும் குறுக்க பேசாமல் அவரை முழுமையாக பேச விடுங்கள். எதனால் இந்த கோபம் என்பது அப்போதே தெரிந்து விடும். அவர் கோபமாக இருக்கும் போது ஏதேனும் உங்களை காயப்படுத்துவது போல பேசியிருந்தால் அதை அவருக்கு தெஇர்யப்படுத்துங்கள். 


4. உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்: 


உங்கள் காதலன் அல்லது காதலி தேவையே இல்லாத காரணத்திற்காக கோபமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவரது நிலையில் நீங்கள் இல்லை. அதனால், அவர் எவ்வளவு வலியை உணர்ந்தார் எதனால் கோபமாக இருக்கிறார் என்பது உங்களுக்கு புரியாது. தனது உணர்வுகளை பற்றி அவர் பேசுகையில், ‘இதெல்லாம் ஒரு விஷயமா..’ என்று கூறினால், நீங்கள் காலி. அதனால், முதலில் அவரது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். அவரது வலியை உணர முடியவில்லை என்றாலும் அதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் புரிந்து கொண்டது அவருக்கு தெரிந்தாலே அவருக்குள் இருக்கும் கோபம் குறைந்து விடும். 


5. மன்னிப்பு கேளுங்கள்: 


உங்கள் காதலர் அல்லது காதலி கோபமாக இருப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்று தெரிந்தால் நேரத்தை வீணடிக்காமல் மன்னிப்பு கேளுங்கள். உங்கள் பக்கம் தவறு இருக்கிறது என்றால், அதை நியாயப்படுத்த எதையும் செய்யாதீர்கள். அறியாமல் செய்த தவறு என்றால் அதற்காக நீங்கள் மனதளவில் மன்னிப்பு கேட்டால் அதை உங்கள் காதலி அல்லது காதலன் பரிபூரணமாக மன்னித்து விடுவார். ஆனால், வேண்டுமென்றே செய்த குற்றம் என்றால் நீங்கள் உங்கள் மன்னிப்பில் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்.  “இனி அது போல நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” எனக்கூறுவது மட்டுமன்றி உங்கள் வார்த்தைக்கு அடுத்த முறையில் இருந்து உண்மையாகவும் இருங்கள். 


மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தனா தகதகவென தங்க தேகத்துடன் மின்னுவதற்கு இதுதான் காரணம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ