கெட்ட விஷயங்களாகவே தோணுதா? கவலைப்படாதீங்க இந்த 5 வழிகளை முயற்சி பண்ணுங்க..!
Overcome Negative Thoughts : எதிர்மறை எண்ணங்களாகவே தோன்றும்போது, அவற்றில் இருந்து விடுபட்டு நேர்மறையாக சிந்திக்க அதற்கான பயிற்சிகளை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
Tips To Think Positive : எதிர்மறை எண்ணங்கள் அதிகம் சூழ்ந்து கொண்டிருந்தால், எப்போதும் மனது கனமாகவே இருக்கும். சாப்பிடுவது முதல் சின்ன சின்ன வேலைகள் செய்வது வரை என அடுத்து என்ன செய்வது என தெரியாது. இப்படியான குழப்பமான நேரத்தில் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு மிக முக்கியமான விஷயம் தியானம், விளையாட்டு, பயணம், ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு நேர்மறையாக சிந்திக்க டிப்ஸ் :
தியானம்
மனம் எதிர்மறை எண்ணங்களை அதிகம் சிந்திக்கும்போது, குழப்பமான நிலையில் இருக்கும். அப்போது அத்தியாவசியமான பயிற்சி தியானம். இது உங்களது மனதை அலைபாய்வதில் இருந்து தடுத்து ஆசுவாசப்படுத்துவதோடு, ஒருநிலைப்படுத்தவும் செய்யும். தியானம் குழப்பமான மனநிலையை தெளிந்த நிலைக்கு கொண்டு வரும். தினமும் காலை மாலை என 15 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யுங்கள். எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அப்படி உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஆன்மீகம்
மனம் எதிர்மறை எண்ணங்களை சிந்திக்கும்போது உங்களுக்குப் பிடித்த கோவில்களுக்கு சென்று வாருங்கள். அங்கு சென்று விரும்பும் கடவுளிடம் மனதார உரையாடுங்கள். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களோ அதனை கோவிலில் இருந்து கொண்டு கற்பனை செய்து வேண்டுதலாகவும் வைத்துவிட்டு வாருங்கள். வாரம் ஒருமுறையாவது அந்த கோவிலுக்கு சென்று வாருங்கள். புதிய கோவிலுக்கு சென்றாலும் நல்ல விஷயம் தான்.
மேலும் படிக்க | Fake Friend-ஐ கண்டுபிடிப்பது எப்படி? மனம் நோகாத சிம்பிள் வழிகள்!
பயணம்
இயற்கையான இடங்களுக்கு பயணம் செய்யுங்கள். நீங்கள் செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட நீர்வீழ்ச்சி, மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சென்று வாருங்கள். அப்போது, உங்கள் எண்ணமெல்லாம் புத்துணர்ச்சி பெற்று, பழைய விஷயங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். அடிக்கடி பயணம் செய்வது என்பது மன மகிழ்ச்சிக்கு உகந்த விஷயம்.
விளையாட்டு
மனதுக்கு மகிழ்ச்சியில்லாமல் இருக்கும் நேரத்தில் நண்பர்களோடு சென்று விளையாடுங்கள். அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டு விளையாடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அப்போது உங்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு அவர்கள் மருந்தாகவும் இருப்பார்கள். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தவிர்க்க வேண்டியவை
உங்களை எந்த விஷயம் கவலைப்பட வைக்கிறதோ, எது மன அழுத்தத்துக்கு காரணமாக இருக்கிறதோ அதில் இருந்து விலகியே இருக்கவும். முடிந்தால் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது காலத்துக்கு விலகி புதிய இடத்தில் இருங்கள். இவையெல்லாம் உங்கள் மனதை எதிர்மறை எண்ணங்களில் இருந்தும், கவலைகளில் இருந்தும் விடுவிக்கும் மிக முக்கியமான பயிற்சிகள் ஆகும்.
மேலும் படிக்க | நீங்கள் அறிவாளியா? இல்லையா? ‘இந்த’ 8 அறிகுறி இருந்தா நீங்க ஜித்து ஜில்லாடிதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r