Fake Friend-ஐ கண்டுபிடிப்பது எப்படி? மனம் நோகாத சிம்பிள் வழிகள்!

How To Identify Fake Friends : நம்மை சுற்றி ஒரு சிலர் பொய்யான நண்பராக இருப்பர். அவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 3, 2024, 04:13 PM IST
  • பொய்யான நண்பர்களை கண்டுகொள்வது எப்படி?
  • அவர்களிடம் இருக்கும் குணாதிசயம் என்ன?
  • டிப்ஸை படிங்க..முழிச்சிக்கோங்க.!
Fake Friend-ஐ கண்டுபிடிப்பது எப்படி? மனம் நோகாத சிம்பிள் வழிகள்! title=

How To Identify Fake Friends : உங்களை பற்றி கூற வேண்டும் என்றால், உங்கள் நண்பர்கள் கூட்டத்தை கொஞ்சம் உற்று நோக்கினாலே போதும் என்று சிலர் கூறுவர். அப்படி கூறப்படும் நண்பர்களே நமக்கு பொய்யானவர்களாக இருந்து விட்டால் என்ன செய்வது? இப்படி நம்மிடம் பொய்யாக நட்புடன் பழகுபவர்களையும், நம்முடன் இருந்து கொண்டே நமக்கு கேடு நினைப்பவர்களையும்தான் Fake Friends என்று ஆங்கிலத்தில் அழகாக கூறுவர். இவர்களை கண்டு கொள்வது எப்படி? அதற்கான சில அறிகுறிகளை இங்கு பார்க்கலாம். 

1.ஆதரவு இருக்காது:

உங்களுக்கு ஒரு உதவி தேவைப்படும் போது அல்லது ஒரு ஆறுதலான வார்த்தை தேவைப்படும் போது அந்த நண்பர் உங்களுடன் இருக்க மாட்டார். இந்த நட்புறவில் நீங்கள் மட்டும் அதிக முயற்சிகளை மேற்கொள்ளும் நபராக இருப்பீர்கள். உண்மையான நண்பர்கள், உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கண்டிப்பாக உடனிருப்பர். அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வர். 

2.போட்டி மனப்பான்மை:

உங்களிடம் பொய்யான நண்பராக பழகுபவர், நீங்கள் எது செய்தாலும் அதனுடன் போட்டியிடுவது போல எதையாவது செய்வார். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கலர் ஆடை உடுத்தி அவர் முன்னிலையில் யாரிடமாவது பாராட்டு பெற்றிருந்தீர்கள் என்றால், சில வாரங்களில் அவரும் அதே போன்ற ஒரு ஆடையை உடுத்தி பிறரது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார். 

3.உங்களை பற்றி நீங்களே தவறாக உணர காரணமாக இருப்பார்:

ஒரு சில நண்பர்கள், உங்களிடம் ஒரு விஷயம் நன்மையானதாகவே இருந்தாலும் அதை வஞ்சப்புகழ்ச்சியில் கூறி, அல்லது அதை பற்றி ஏதேனும் தவறான கருத்தை கூறி உங்களை சிறுமைப்படுத்த நினைப்பர். 

4.பிறரிடம் உங்களிடம் பேசுவது:

உங்களிடம் ஏதேனும் அவர்களுக்கு பிரச்சனை என்றால், உங்களிடம் நேராக வந்து அதை கூறாமல் உங்களுக்கு பின்னால் சென்று உங்களை பற்றி பேசுவர். உங்களை பற்றி வேண்டுமென்றே ஏதேனும் வதந்தியை பரப்பி, அதை வைத்து பிறருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டிருப்பர்.

5.கவனம் அவர்கள் மீது மட்டுமே இருக்கும்:

உங்களுடன் இருக்கும் நண்பர், நீங்கள் சேர்ந்து எந்த இடத்திற்கு சென்றாலும் அனைவரது கவனமும் அவர் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பார். அது உங்களது பிறந்தநாளாகவே இருந்தாலும் சரி, அனைவரும் அவரை ஸ்பெஷலாக கருத வேண்டும் என்று நினைப்பார்.

மேலும் படிக்க | ஒன் சைட் லவ்வை டபுள் சைடாக மாற்றுவது எப்படி? ஈசியான காதல் டிப்ஸ்!

6.எதையாவது செய்ய அழுத்தம் கொடுப்பது:

ஏதேனும் தவறான செயலில் ஈடுபட, உங்களை தூண்டும் நபராக இருப்பார். உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் கூட உங்களை எப்படியாவது அதை செய்ய வைத்து விட வேண்டும் என்று குறிக்கோளுடன் இருப்பார்.

7.பொறாமை:

உங்களுடன் இருக்கும் பொய்யான நண்பருக்கு உங்களை பற்றி எப்போதும் ஏதேனும் பொறாமை அல்லது பாதுகாப்பற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர் உங்களுக்கு எதிராக குழிப்பறிக்க கூட வாய்ப்பிருக்கிறது. 

8.பழிவாங்கும் எண்ணம்:

பொய்யான நண்பர்கள், நீங்கள் எப்போதோ செய்த தவறுக்கு கூட உங்கள் மீது கோபம் கொண்டு, பழிவாங்கும் எண்ணம் கொண்டிருப்பர். இருவருக்கும் சண்டை வந்துவிட்டது என வைத்துக்கொண்டால், அந்த சண்டையில் உங்கள் தவறு என்ன என்பதை உங்களது உண்மையான நண்பர் கூறிவிடுவார். ஆனால், பொய்யான நண்பர் அனைத்தையும் சேர்த்து வைத்து, ஒரு நாள் அத்தனையையும் சொல்லிக்காட்டுவர்.

மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News