துவாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பன்னிரண்டாவது திதி துவாதசி ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துவாதச எனும் வடமொழிச் சொல் பன்னிரண்டு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பன்னிரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பன்னிரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை (Amavasya) முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பன்னிரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவாதசித் திதி வரும்.


ALSO READ | கோயிலுக்கு செல்பவர்கள் வழிபடுவதற்கான அடிப்படை வழிமுறைகள் இதோ!


அமாவாசையை அடுத்துவரும் துவாதசியைச் சுக்கில பட்சத் துவாதசி என்றும், பூரணையை அடுத்த துவாதசியைக் கிருட்ண பட்சத் துவாதசி என்றும் அழைக்கின்றனர்.


ஏகாதசி (Ekadasi) விரதத்தின் சிறப்பைப் போலவே துவாதசி திதியின் மகிமையும் அற்புதமானது. ஒரு துவாதசி திதி அன்றுதான் தன் இல்லத்துக்கு யாசகம் கேட்டுவந்த சிறுவனான ஆதிசங்கரருக்கு கைவசம் இருந்த நெல்லிக்கனியை தானம் செய்தாள் வறியவள் ஒருத்தி. அவளது தயாள உள்ளத்தில் மகிழ்ந்த சங்கரர் சௌந்தர்யலஹரி பாட தங்க மழை பொழிந்தது.


இது துவாதசி அன்று செய்யும் தானத்தின் மகிமையைச் சொல்லும் நிகழ்வு. எனவே, துவாதசி அன்று தவறாமல் தானம் செய்வது அவசியம். சிறிய தானமும் பெரிய பலன்களைக் கொண்டுவந்து சேர்க்கும்.


துவாதசி அன்று விரதம் முடிந்து உண்ணும் உணவில் 21 வகையான காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். குறைந்தபட்சம் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியனவற்றைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். மசாலா, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.


ALSO READ | “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR